பக்கம்:மதன கல்யாணி-3.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 மதன கல்யாணி தன்னைத் துக்கிக் கொண்டு போய் சமுத்திரத்தில் போட்டது அவளுக்கு அரையுணர்வாகத் தெரிந்தது. அதன்பிறகு தான் தண்ணில் கிடந்து தத்தளித்து உயிருக்கு மன்றாடிய தருணத்தில் யாரோ தன்னை எடுக்க முயன்றதும் கனவு போலப் புலப்பட்டது. அதன் பிறகு பின்னிரவில் தனக்குப் பலவகையான சிகிச்சைகள் செய்யப்பட்டதும் தெரிந்தது. ஆகவே, அவள் காலையில் தெளிவு பெற்று விழித்த காலத்தில், அவளுக்கு எல்லாம் வியப்பாகவே தோன்றியது. தேவேந்திரனது மாளிகை போலக் காணப்பட்ட ஓரிடத்தில் மிகவும் சொகுசான ஒரு படுக்கையில் தான் விடப் பட்டிருந்ததும், ஏராளமான பணிமக்கள் சூழ்ந்திருந்து அவ்வளவு சிறப்பான இடத்தில் வைத்துக் கொண்டு அவ்வளவு பட்சமாகவும் அருமையாகவும் காப்பாற்றுகிற மனிதர்கள் யார் என்பதை அறிந்து கொள்ளவும், தனது நன்றியறிதலின் பெருக்கை வெளிப்படுத்தவும் அவளது மனம் துடித்துக் கொண்டிருந்தது. தனக்கு உயிர்ப்பிச்சை கொடுத்தவர்களான அந்த மனிதர்களுக்கு எப்படிப்பட்ட கைம்மாறு தன்னால் செய்யக்கூடியதாக இருந்தாலும் தான் எப்படியும் செய்தே தீரவேண்டும் என்ற ஒர் உறுதியும் அவளது மனதில் அப்போதே உண்டாயிற்று. அவள் அவ்வாறு எண்ணமிட்டுக் கொண்டிருந்த சமயத்தில், அவர்கள் இருவருக்கும் மருந்துகளும் சுகமான ஆகாரங்களும் கொடுக்கப்பட்டன. மதனகோபாலன் படுக்கையை விட்டெழுந்து ஒரு சோபாவின் மேல் சாய்ந்து கொண்டிருந்தான். ஜெமீந்தார் அவனுக்கருகில் உட்கார்ந்து கொண்டிருந்தார். கருப்பாயி தனது படுக்கையிலிருந்த திண்டில் சாய்ந்த வண்ணம் சோர்ந்து கிடந்தாள். அப்போது மோகனாங்கி யும் மதனகோபாலனுக்கருகில் நின்று கொண்டிருந்தாள். பணி மக்கள் எல்லோரும் தங்களது அறைகளுக்குச் சென்று விட்டனர். அப்போது ஜெமீந்தார் மதனகோபாலனை நோக்கி முதல் நாள் நடந்த சம்பவத்தின் வரலாற்றைக் கேட்க, அவன் பங்களவை விட்டுப் போன முதல், கருப்பாயியை எடுத்து வந்து மணலின் மேல் போட்டது வரையில் உள்ள விவரங்களையும் மைனரது தென்னஞ் சோலைக்குள் நடந்த சம்பாஷனைகளின் விவரத்தை யும் எடுத்துக் கூறினான். அதைக் கேட்ட ஜெமீந்தார் மதனகோ பாலனது காருண்ய குணத்தைப் பற்றியும் செளரியத்தைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/30&oldid=853427" இலிருந்து மீள்விக்கப்பட்டது