பக்கம்:மதன கல்யாணி-3.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 71 நின்று கொண்டிருக்கிறார்கள்" என்று கூறிய வண்ணம் ஜெமீந் தாரிணியின் பக்கம் திரும்பினாள். கோமளவல்லியினது அழகையும், நற்குணத்தையும், அடக்க ஒடுக்கம் பணிவு முதலிய உத்தம லக்ஷணங்களையும், அவள் தனது தாயினிடத்தில் வைத்துள்ள வாத்சல்யத்தையும் கண்டு, விருந்தாளிகள் இருவரும், அவள் நல்ல உத்தமஜாதிப் பெண் என்றும், தங்களுக்கு வந்த கடிதம், கல்யாணியம்மாள் சொன்ன படி, யாரோ ஒரு பகைவனால் எழுதப்பட்ட அபாண்டமான பொய்க் கடிதம் என்றும் எண்ணிக் கொண்டதன்றி, அப்படிப் பட்ட அருங்குணமணி தங்களது வீட்டிற்கு நாட்டுப் பெண்ணாக வரப்போவதைப் பற்றி அளவில்லாத பெருமையும், சந்தோஷ மும், ஆனந்தமும் அடைந்தவர்களாயினர். அந்த விநோதக் காடசி யைக் கண்ட சிவஞான முதலியாரது மனம் கரைகடந்த ஆனந்தத் தினால் பொங்கிப் பூரிப்படைந்தது; கல்யாணியம்மாள் மகா தந்திர சாலியென்றும், புதிதாக வந்தவர்களை மிகவும் சாமர்த்தியமாக ஏமாற்றிவிட்டாள் என்றும், உண்மையிலேயே தேக அசெளக்கி யத்தோடிருந்த கோமளவல்லியம்மாளை துரைஸானியம்மாள் என்று ஆள்மாறாட்டம் செய்து விட்டாள் என்றும் நினைத்து மிகுந்த உற்சாகமும் துணிவும் அடைந்தவராக நின்றார். உடனே கல்யாணியம்மாள் விருந்தினரையும் மற்றவரையும் அழைத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டுத் தனது அந்தப்புரத்திற்குப் போய்ச் சேர்ந்தாள். அப்போது, இளைய ஜெமீந்தார் மிகுந்த திருப்தியும் சந்தோஷ மும் ஜ்வலித்த முகத்தினராய்க் கல்யாணியம்மாளை நோக்கி, "எங்களுக்கு நேரமாகிறது; நாங்கள் உத்தரவு வாங்கிக் கொள்ளு கிறோம். குழந்தையின் உடம்பை ஜாக்கிரதையாகப் பாருங்கள்; உடனே முகூர்த்தப் பத்திரிகை தயாரித்து அனுப்புங்கள். நாங்கள் இதே உறுதியாக எண்ணிக் கொண்டிருப்போம்; அந்தக் கடிதம் எவனோ ஒர் அயோக்கியனால் எழுதப்பட்டதென்பதைப் பற்றிக் கொஞ்சமும் சந்தேகமில்லை" என்றார். 3. அதைக் கேட்ட கல்யாணியம்மாள் உடனே அவர்கள் இருவருக் கும் சந்தனம், தாம்பூலம், பழங்கள், புடவை, வேஸ்டி முதலிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/75&oldid=853476" இலிருந்து மீள்விக்கப்பட்டது