பக்கம்:மதன கல்யாணி-3.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 89 அவளது உருக்கமான சொற்களையும் பரிதாபகரமான நிலைமை யையும் கண்டு விவரிக்க இயலாதபடி தத்தளித்த மதனகோபாலன் தான் அதற்கு மேலும் பேசாமல் நிற்பது தவறென்று நினைத்துத் துணிவடைந்தவனாய், "அமமணி தாங்கள் சொல்வதெல்லாம் உண்மை என்று என் மனசு நமபிவிட்டது. ஆனால், ஒரே ஒரு சந்தேகம் என் மனசில் எழுந்து போராடுகிறது. நான் அன்றைய தினம் தங்களிடத்தில் வந்து, தகாக வார்த்தைகளைச் சொல்லி ஏதோ துன்மார்க்கத்தில் பிரவேசித்ததாகத் தாங்கள் மற்ற எல்லா பங்களாக் களிலும் வெளியிடடீர்களே! அப்படி நான் அணுப்பிரமானம் வார்த்தையிலாவது நடத்தையிலாவது தங்களிடத்தில் தவறாக நடந்ததுண்டா? அது எனககே சந்தேகமாக இருக்கிறது. ஏனென் றால் அன்றைய தினம் என் மனம் அவ்வளவு அதிகமாகக் குழம்பி இருந்தது. அந்த விஷயத்தை மாத்திரம் தாங்கள் சொல்லுங்கள்" என்று பணிவாகக் கேட்டான். உடனே கல்யாணியம்மாள், "குழந்தாய்! நீ மகா பரிசுத்தமான மனசை உடையவன் என்பது முக்காலும் சத்தியம். வார்த்தையா லும செய்கையாலும் மாத்திரமல்ல; மனசால் கூட, நீ என்னிடத்தில் தவறான எண்ணம் கொண்டிருக்க மாட்டாய் என்பது உறுதியான சங்கதி. அந்த விஷயத்தில் நான் சொன்னது சுத்தமான பொய் தான்; அதை ஒப்புக் கொள்ளுகிறேன். அதைத் தவிர, வெள்ளைக்காரி யாகப் போய்ச் செய்த காரியமெல்லாம் நான் செய்ததல்ல. அது நடந்த பிறகே எனக்குத் தெரிந்தது. அதில் நான் சம்பந்தப்பட வில்லை என்பதை நான் ருஜூப்படுத்தக் கூடும். ஆனால், உன் விஷயத்தில் நான் அவதூறு சொன்னதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அன்றைய தினம் கடைசியில், நீ திமிறிக் கொண்டு ஒடிய போது, நான் பின்னால் துரத்திக் கொண்டு வந்தேன் அல்லவா? அந்தச் சமயத்தில் என்னுடைய பெண்கள் இருவரும் வநது நமமைக் கண்டு கொண்டார்கள். அவர்களுள் மூத்தவள் மகா துர்க்குணங்கள் நிறைந்தவள் ஆகையால், அவள் என்னுடைய கற்பைப்பற்றி சந்தேகப்பட்டு வேலைக்காரர்களிடத்தில் எல்லாம் சொல்லிப் புரளிச் செய்வாள் என்ற அச்சத்தினாலும், நீயும் என்னுடைய நடத்தையை வித்தியாசமாக நினைத்து மீனாகூஜியம் மாள் முதலியோரிடத்தில வெளியிட்டு விடுவாயோ என்ற கவலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/93&oldid=853496" இலிருந்து மீள்விக்கப்பட்டது