பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிவியலும் மதவியலும்

105


களும் தெருக்களும், புகைக்காற்றால் ஒளிபெறச் செய்யப்பட்டன. தீக்குச்சி கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம், தெருப்பு மனிதனின் நெருங்கிய நண்பனாக மாறிவிட்டது. நிழற் படம் எடுக்கும் கலை எல்லோர்க்கும் தெரிந்ததாக வளர்ந்து விட்டது. கதிரவன் ஓவியக் கலைஞனாக மாறிவிட்டான். நிலம் வழித் தந்திகளும், கடல்வழித் தந்திகளும் கண்டு பிடிக்கப்பட்டன. மின்னாற்றல் செய்திகளை ஏந்திச் செல்லும் ஏதுவாயிற்று : நாடுகள் ஒன்றுக்கொன்று நெருக்கமுடையனவாக வளர்ந்தன. மயக்க மருந்து கண்டுபிடிக்கப்பட்டது; வலி தூக்கத்தில் மறக்கடிக்கப்பட்டது. புண்ணாற்றல் ஒரு அறிவியலாக வளரத் தொடங்கியது. தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டது; அது கேட்கும் செவிகளுக்கு அலைகளாகிய சொற்களைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறது. இசைப்பெட்டி, புள்ளிகளையும் கோடுகளையும் இசைத்தட்டிலே பெற்றுக்கொண்டு, நமது பேச்சையே நமக்கு மீண்டும் எதிரொலியாகத் தருகிறது.

பிறகு மின்னொளி வந்தது; இரவை பகலாக்கிக் காட்டுகிறது; எந்த மின்குற்றல் கோடை மேகத்தினின்றும் கிளம்பி, பாழையும் அழிவையும் உண்டாக்கிற்றே, அதே மின்னாற்றல், வியப்புக்குரிய பொறிகளை இயக்குவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. முக்கோண ஸ்படிகக் கற்களின் ஆராய்ச்சிகள், கதிரவனின் ஒளிக்கதிரிலுள்ள பொருள்களைத் தெளிவாக்கிக் காட்டுகின்றன. சிறந்த பெருஞ் சிந்தனையாளர்கள், பொருள் – ஆற்றல் ஆகியவற்றின் அழிக்கமுடியாத தன்மையைப் பற்றியும், அழிக்கமுடியாத தன்மை பெற்றவைகளை உண்டாக்க முடியாது என்பதைப் பற்றியும் நிரூபித்துக் காட்டினார்கள். நிலயியல் ஆராய்ச்சியாளர்கள் பாறைகளிலும், மலைகளிலும், மண்ணடுக்குகளிலும் அடங்கிக்கிடக்கும் பொருள்களையும், அவற்றிற்குள் உள்ள மாறுபாடுகளையும் கண்டறிந்து, உலக வரலாற்றின் கதையைச் சிறிதளவு கூறினார்கள்; மரவியலின் கதையையும், விலங்கியலின் கதையையும் கூறினார்கள். மனித விலங்கியல் ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு விதமான எலும்புக்