பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

மதமும் மூடநம்பிக்கையும்


அளிக்கக்கூடும்; ஆனால் சான்று ஏதும் இல்லை! பழைய எலும்புகள், புனிதக் கந்தல்கள், பரிசுத்த மயிர்கள், உருவத் தோற்றங்கள், மரத்துண்டுகள், துருப்பிடித்த ஆணிகள், காய்ந்த குருதி ஆகியவைகள் நலம் பயக்கும் நன்மைகளாக இருந்தாலும் இருக்கக்கூடும்; ஆனால் அதற்குச் சான்று ஏதும் இல்லை! வால் நட்சத்திரங்கள், கிரகணங்கள், விண் வீழ்கொள்ளிகள், அரசர்களின் இறப்பையும், நாடுகளின் அழிவையும் அல்லது பிளேக்கின் வருகையையும் முறையே முன்கூட்டித் தெரிவிப்பனவாக இருந்தாலும் இருக்கக் கூடும்; ஆனால், அதற்குச் சான்று ஏதும் இல்லை! பிசாசுகள் மனிதர்களின் உடல்களையும், உள்ளங்களையும் தம் வயப்படுத்தினாலும் படுத்தக்கூடும்; ஆனால் அதற்குச் சான்று ஏதும் இல்லை! மந்திரவாதிகள் பூதத்தின் உதவியினால் காற்றுகளை அடக்கவும், நிலத்திலும் நீரிலும் புயல்களை உண்டாக்கவும், கோடை காலத்தில் பனிப் படலத்தையும் பனிக்கட்டிகளையும் உண்டாக்கவும், மந்திரத்தால் வேலை செய்து காட்டவும், பொதுமக்களின் மகிழ்ச்சிக்கு மாறுபாடாகச் சபிக்கவும் ஆன செயல்களைச் செய்தாலும் செய்யக் கூடும்; ஆனால், அதற்குச் சான்று ஏதும் இல்லை! பழைய– புது வேதங்களில் சொல்லப்பட்டுள்ள அதிசயக்காட்சி களெல்லாம் நிரூபித்துக் காட்டப்பட்டாலும் படலாம்; ஆனால் அதற்குச் சான்று ஏதும் இல்லை! காய்ந்து வதங்கிப் போன இறந்த உயிர்களின் சதைப்பற்று, மீண்டும் உயிர் பெற்று எழுந்தாலும் எழக்கூடும்; ஆனால் அதற்குச் சான்று ஏதும் இல்லை! செத்து விழுந்த பிணம், உயிர்பெற்று எழுந்து, மனைவியும் குழந்தைகளும் இடும் முத்தங்களை உணர்ந்தாலும் உணரககூடும்; ஆனால் அதற்குச் சான்று ஏதும் இல்லை! தண்ணீர் திராட்சை ரசமாக மாற்றப்படு வதும் ரொட்டியும். மீன்களும் அதிகமாக்கப்படுவதும், ஆடவர்–பெண்டிர் உடல்களிலிருந்து பிசாசுகள் விரட்டப்படுவதும் ஆன நிகழ்ச்சிகள் நடந்தாலும் நடக்கக் கூடும்; ஆனால் அதற்குச் சான்று ஏதும் இல்லை! மீன்கள் தமது வாய்களில் காசுகளைக் கொண்டிருந்தாலும் கொண்-