மூடநம்பிக்கையும் அறிவியலும்
109
டிருக்கக்கூடும்; ஆனால் அதற்குச் சான்று ஏதும் இல்லை! களிமண்ணும் எச்சிலும் சேர்ந்து ஒளி இழந்த கண்ணுக்கு மீண்டும் ஒளியூட்டினாலும் ஊட்டக்கூடும்; ஆனால் அதற்குச் சான்று ஏதும் இல்லை! மந்திரச் சொற்கள் நோயைப் போக்கிக், குஷ்டத்தை நீக்கி நலம் விளைவித்தாலும் விளைவிக்கக்கூடும்; ஆனால் அதற்கு சான்று ஏதும் இல்லை!
இரும்பு மிதப்பதும் ஆறு பிளப்பதும், காய்ந்த எலும்புகளிலிருந்து நீர் பீறிடுவதும், தேவதூதர்களுக்குப் பறவைகள் உணவு ஏந்திச் செல்வதும், உருவப்பட்ட வாள் முனையில் தேவதைகள் தோன்றுவதும் ஆன நிகழ்ச்சிகள் நடந்தாலும் நடக்கக்கூடும்; ஆனால் அதற்குச் சான்று கிடையாது!
பொய் சொல்லும் ஆவிகளைக் கொண்டு ஜேஹோவா ஒரு அரசனை ஏமாற்றியதும், காட்டுமிராண்டிகள் அதிசயங்கள் பல செய்ததும் நடந்திருந்தாலும் நடந்திருக்கக்கூடும்! ஆனால் அதற்குச் சான்று ஏதும் இல்லை!
சாத்தான் என்ற பூதம் ஒன்று இருப்பதும், அவன் தந்திரமும் ஆற்றலும் கொண்ட எண்ணிறந்த பிசாசுகளைக் கொண்டிருப்பதும், மக்களுக்குத் தீங்கைச் சொல்லிக் கொடுப்பது, அவர்களை வெறுப்படையச் செய்வது, தவறான வழிகளில் ஈடுபடுத்துவது, சிறைபிடிப்பது, சிறை யடைப்பது போன்ற தொழில்களை அந்தப் பிசாசுகள் செய்துகொண்டிருப்பதும் ஆன செயல்கள் நடந்தாலும் நடக்கக்கூடும்; ஆனால் நமக்கு ஏற்படும் தொல்லை யெல்லாம், அதற்குச் சான்று ஏதும் இல்லை என்பதே! மதப்புரோகிதர்கள் வாயினால் கூறுவதைத் தவிர வேறு சான்று ஏதும் இல்லை!
நரகம் என்று சொல்லப்படும் ஒரு இடம் இருப்பதும், அங்கு பூதமெல்லாம் வாழ்வதும், சிந்திக்கவும் சிந்தித்த கருத்துக்களை வெளியிடவும் உறுதிபூண்டிருக்கிற மனிதர்-