பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

மதமும் மூடநம்பிக்கையும்


அளித்திருக்கிறது; காட்டுமிராண்டியின் மூளையிலிருந்து உதித்த பயங்கரப் பிராணிகளையும் பேய்-பூதம்-பிசாசுகளையும் இறக்கைகெண்ட தேவதைகளையும் அழித்திருக்கிறது!

அறிவியல்தான், உண்மையான உதவிபுரியக்கூடிய ஏதுவாகும். அதுதான் ஆணவத்தை அகற்றி நாணயத்தைப் புகுத்தும்; எல்லா மூட நம்பிக்கைகளையும் தள்ளிவிட்டு உண்மைபேசும் தன்மையைப் புகுத்தும் அது, பயன் படத்தக்கவைகள் எவை என்பதை மதத்திற்குச் சொல்லிக் கொடுக்கும். அது, அழுத்தமான மூடநம்பிக்கை எந்த உருவில் அமைந்திருந்தாலும், அதனை அழித்துவிடும். அது, சிந்தனையற்ற பக்திக்குமேல், சிந்தனையுள்ள ஐயப்பாட்டை வைக்கும். அது, புரோகிதர்கள்– மதவாதிகள்–மகான்கள் ஆகியோர்க்குப் பதிலாகத் தத்துவாசிரியர்கள்–சிந்தனையாளர்கள் கற்றறிந்தவர்கள் ஆகியோரை நமக்கு அளித்திருக்கிறது அது, வறுமையையும் குற்றத்தையும் அகற்றும்; எல்லாவற்றையும்விட சிறந்ததும், உயர்ந்ததும் மதிப்பு வாய்ந்ததுமான செயல், அது உலகம் முழுமைக்கும் விடுதலை வழங்கும் என்பதேயாகும்!

முடிவுற்றது