பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எப்படிச் சீர்திருத்துவது?

35


நறுமலர் வளரும் என்றும் நம்பிக்கொண்டிருக்கும் ஆட வரும் பெண்டிரும், அறிவியலின் இந்த ஆற்றல் கண்டு திகைப்படைந்த முகங்களைத், தங்களின் முன்னேற்றத்' தடுப்புக் கைகளால், வெட்கப்பட்டு மூடிக்கொள்வார்கள் என்பது உறுதி!

ஒளி தீமையின் பகை என்றும், இருளில்தான் தூய்கை நிலவுகிறது என்றும் மக்கள் தங்களைப்பற்றி அறிந்து கொள்வது மிக அபாயகரமானது என்றும், தங்களுடைய நலனுக்குப் பாதகமாக இருக்கின்ற இயற்கையின் உண்மைகளை ஆராய்வது மிகக் கேடு பயக்கும் என்றும் நினைக்கும் ஆடவர்-பெண்டிர், அறிவு உணர்ச்சியை அடக்கியாளும்படி செய்யப்படவேண்டும் என்ற எண்ணத்தைக் கண்டு, உறுதியாக அச்சப்பட்டுப் போவார்கள்!

ஆனால், என்று ஆடவரும் = பெண்டிரும். சுற்றுச் சூழ்நிலைகளுக்கான காரணங்களைத் தங்கள் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்தும், தங்கள் ஒழுக்க அறிவினைக் கொண்டு ஆராய்ந்தும் பார்க்கிறார்களோ அந்த நாளையே நான் ஆவலோடு எதிர்பார்க்கிறேன். என்று, அவ்வறிவுகளைத் துணைக்கொண்டு, நோயும் துயரும் நீடித்து நிலைத்திருப்பதை மறுத்தொதுக்க முன்வருவார்களோ, தோல்விகள் நிரம்பியிருப்பதை மறுத்தொதுக்க முன்வருவார்களோ, அந்த நாளைத்தான் நான் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

ஒரு அந்தக்காலம் வரும்பொழுது, சிறை கூடத்தின் சுவர்கள் கீழே விழும்; இருட்டறைகள் ஒளியால் விளங்கும். உலகை வெறுத்து வரும் தூக்குமரத்தின் நிழல் மறையும்! அந்தக்காலம் வரும்பொழுது, வறுமையும் குற்றமும் குழந்தையற்றவைகளாகும்! அந்தக்காலம் வரும்பொழுது தேவைக்காகத் துடித்திடும் கைகால், 'நைவேத்தியம்' வாங்கக் கைகளை நீட்டா; அவைகள் புழுதியாகக் கருதப்படும்!