பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

மதமும் மூடநம்பிக்கையும்


அந்தக்காலம் வரும்போது. உலகம் முழுவதும் அறிவின் மயமாகும்; நன்மையின் மயமாகும்; விடுதலை மயமாகும்!

மதம் ஒருபொழுதும் மனித சமுதாயத்தைச் சீர்திருத்தாது; ஏனெனில், மதம் அடிமைத்தனம் கொண்டிருப்பது ஆகும் !

மதத் தொடர்பற்ற விடுதலை வாழ்வு வாழ்வதும், அச்சத்தின் கட்டுக்களையும் கோட்டைகளையும் விட்டு விலகுவதும். நேராக நிமிர்ந்து நின்று எதிர்காலத்தைப் புன்னகையோடு வரவேற்பதும் எவ்வளவோ மேன்மையானவையாகும்!

சில வேளைகளில் உல்லாச வாழ்வுக்கு உங்களை ஓப்படைப்பதும், கடலலையிலே மூழ்கி எழுவதும், உலகின் கண்மூடித்தனமான ஆற்றலில் நீங்கள் திளைத்திருப்பதும், சிந்திப்பதும், கனவு காணுவதும் வாழ்க்கையின் தொடர்ச்சியையும் அதிலுள்ள கட்டு திட்டங்களையும் மறப்பதும், கவலை தரும் நோக்கத்தையும் குறிக்கோளையும் மறப்பதும், மூளையின் கற்பனை ஓவியங்களிலே திளைத்து நிற்பதும், இறந்தகால அணைப்புகளையும், முத்தங்களையும் மீண்டும் ஓருமுறை நினைப்பதும், வாழ்க்கையின் ஆரம்ப நிலையை மீண்டும் கொண்டுவருவதும். இறந்து போனவர்களுடைய உருவங்களையும். முகங்களையும் மீண்டும் ஒருமுறை பார்ப்பதும், வருங்காலத்திற்காகும்படியான ஓவியப் படங்களை வரைவதும், எல்லாக் கடவுள்களையும் மறப்பதும் அவர்களுடைய உறுதிமொழிகளையும் அச்சுறுத்தல்களையும் மறப்பதும் வாழ்க்கையின் மகிழ்ச்சிக் கட்டங்களை நீங்களே உள்ளுக்குள் நினைந்து மகிழ்வதும், போர்ப்படையின் இசை முழக்கத்தைக் கேட்பதும் அச்சமற்ற உங்களுடைய இதயத் துடிப்புகளை நீங்கள் கேட்பதும் எவ்வளவோ மேன்மை யானவைகளாகும்!