பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எப்படிச் சீர்திருத்துவது?

37


மேலும், நல்ல பயனுள்ள செயல்களை நீங்கள் செய்யவும், உங்களுடைய மூளையிலுள்ள கொள்கைக்கு ஏற்ப எண்ணத்தையும் செயலையும் நீங்கள் அடையவும், பொது பொருள்கள் என்னும் பூக்களில், கலைத் தேனைப் பருக, தேனீயைப்போல் பறந்து செல்லவும், உண்மைகளைப், பயிற்சி பெற்ற - நிலையான கண்களால் பார்த்தறியவும், வெகு தொலைவில் கண்ணுக்கும் கருத்துக்கும் எட்டாதவைகளை இப்பொழுதுள்ளவைகளோடு, முடிபோடும், மெல்லிய நைந்துபோன கயிறுகளைக் கண்டறியவும், அறிவினைப் பெருக்கிக் கொள்ளவும், வலிவற்றவர்களின் தாங்கமுடியாத சுமைகளை அகற்றவும், மூளையை வளப்படுத்தவும், நேர்மைக்குப் பரிந்து பேசவும், உயிருணர்ச்சிக்கு ஒரு அரண்மனை அமைக்கவும், நீங்கள் வீறிட்டு எழுவது, எவ்வளவோ மேன்மை பயப்பதாகும்!

இதுதான் உண்மையான 'மதம்'; இதுதான் உண்மையான 'வழிபாடு' !