பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூடநம்பிக்கை என்றால் என்ன ?

41


ஆயிரக்கணக்கான மக்கள் அதிர்ஷ்ட—துர் அதிர்ஷ்ட நாட்கள், எண்கள் குறிகள், அடையாளங்கள், நதைகள் என்பவற்றில் நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.

பெரும்பாலான மக்கள் வெள்ளிக்கிழமையைத் துர் அதிர்ஷ்டமான நாள் என்று கருதுகிறார்கள். பயணம் புறப்பட, திருமணம் செய்துகொள்ள, ஏதாவது தொழிலில் பங்குபோட அந்த நாள் மிகக் கெட்ட நாள் என்று கருதுகின்றனர். இதற்குச் சொல்லப்படும் ஒரே காரணம் வெள்ளிக்கிழமை துர் அதிர்ஷ்டமான நாள் என்பதாகும்.

கடற்பயணம் புறப்படுதல், காற்றுகளை அல்லது அலைகளை அல்லது நீர் உயர்தல்களை மற்ற நாட்களில் எந்த அளவுக்குப் பாதிக்கிறதோ அந்த அளவுக்குக் குறைவாகவோ அதிகமாகவோ வெள்ளிக்கிழமை என்பதற்காகப் பாதிப்பதில்லை. அப்படியிருந்தும். வெள்ளிக்கிழமை துர் அதிர்ஷ்டமான நாள் என்று கொள்ளப்படுவதற்கு இருக்கும் ஒரே காரணம், 'அப்படிச் சொல்லப்படுகிறது' என்பதுதான்

அதுபோலவே, பதின்மூன்று பேர்கள் உட்கார்ந்து சாப்பிடுவது மிக ஆபத்தானது என்று பெரும்பாலான மக்களால் எண்ணப்படுகிறது. அப்படிப் பதின்மூன்று என்பது ஆபத்தான எண் என்றால் இருபத்தாறு எண்பது அகைப்போல் இருமடங்கு ஆபத்தானதாக ஆகவேண்டும். ஐம்பத்திரண்டு என்பது நான்கு மடங்கு ஆபத்தானதாக இருக்கவேண்டும்

பதின்மூன்று பேர்கள் உட்கார்ந்து சாப்பிட்டால் அவர்களில் ஒருவர் ஓராண்டுக் காலத்திற்குள் இறந்து படுவார் என்று சொல்லப்படுகிறது. ஒவ்வொருவருடைய உணவு செரிக்கும் தன்மைக்கும், உட்காருவோரின் எண்ணிக்கைக்கும் நேரடித் தொடர்பு எதுவும் இருக்க வில்லை;