பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

மதமும் மூடநம்பிக்கையும்


தனிப்பட்டவர்களின் நோய்களுக்கும், எண்ணுக்கும் தொடர்பு இருக்கவில்லை என்பதை நாம் சாதாரணமாக இப்பொழுது அறிகிறோம். பதின்மூன்று பேர்கள் உட்கார்ந்தால் ஒருவர் உறதியாக இறந்துபடுவர் என்ற கருத்தை ஏற்றுக்கொண்டு எண்ணிக்கையை முக்கியமாக நாம் எடுத்துக்கொண்டோமென்றால் பதின்மூன்று பேர்களைவிடப் பதின் நான்கு பேர்கள் என்பது இன்னமும் அதிகமான ஆபத்தைத் தருவதாகத்தானிருக்க வேண்டும்.

உப்பு வைந்திருக்கும் தட்டைக் கவிழ்த்துவிடுவது என்பது மிகவும் துர் அதிர்ஷ்டமானது. திராட்சைக் குழம்பைச் சிந்துவது என்பது அளவளவு துர் அதிர்ஷ்டமானது அல்ல என்று சொல்லப்படுகிறது

ஏன் உப்புமட்டும் எதிரிடையானதாக மாறவேண்டும்; திராட்சைக் குழம்பு சாதமாக இருக்கவேண்டும்?

படக் கொட்டகையில் ஒன்றைக் கண்ணன் முதலில் நுழைந்தால், மக்களின் எண்ணிக்கை குறையும், படம் ஓடுவது தோல்வியுறும் என்று நம்பப்படுகின்றது.

முதலில் நுழையும் ஒரு மனிதனுடைய கண்பார்வைக் கோளாறு ஒரு சமுதாயத்தின் நோக்கத்தை எப்படி மாற்றிவிடும்? அல்லது சமுதாயத்தின் நோக்கம் எப்படி ஒரு ஒன்றைக் கண்ண னை முதலில் கொட்டசையில் நுழையும்படி செய்யும்? இவைகளுக்குத் தெளிவான விளக்கங்கள் ஒருபொழுதும் கொடுக்கப்பட்டதில்லை. இவ்வாறு சொல்லப்படும் காரணத்திற்கும்-காரியத்திற்கும் நாமறிந்தவரையில் எந்தவகை தொடர்பும் இருப்பதாகத் தெரிய வில்லை!

வெள்ளைக்கல் அணிந்துகொள்வது துர் அதிர்ஷ்டத்தைத்தரும்; சிவப்புக்கல் அணிந்து கொள்வது நலத்தை அளிக்கும் என்று நம்பப்படுகிறது. எதிர்காலத்தை