பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூடநம்பிக்கை என்றால் என்ன ?

43


இந்தக் கற்கள் எப்படிப் பாதிக்கும்? அவை எப்படிக் காரணங்களை அழித்துக் காரியங்களைத் தோல்வியுறச் செய்யும்? இவற்றின் விளக்கத்தை யாரும் அறிந்திருப்பதாகத் தெரியவில்லை!

இப்படியாகப் பல்லாயிரக்கணக்காக அதிர்ஷ்ட-துர் அதிர்ஷ்டப்பொருள்கள், எச்சரிக்கைகள், சகுணங்கள், முன்னறிவுப்புகள் இருக்கின்றன; ஆனால் தெளிவுணர்வும், அறிவுக்கூர்மையும், பகுத்தறிவும் கொண்ட மக்கள் அனைவரும், இவை ஒவ்வொன்றும் அபத்தம் என்றும், முட்டாள் தனமான மூட நம்பிக்கை என்றும் அறிவார்கள்.