பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மூடநம்பிக்கை 3

அதிசயம்பற்றிய மூடநம்பிக்கை

பேய்—பூதம்—பிசாசு ஆகியவற்றிலே மக்கள் கொண் டிருந்த நம்பிக்கை, மாந்திரீகம் என்னும் வேறோர் நம்பிக் கைக்கு அடிப்படையாக அமைந்திருந்தது.

பூதத்திற்கு 'ஆன்மா' ஒன்றைக் காவுகொடுத்தால் அது, அதற்குப் பதிலாகச் சில பல நன்மைகளைப் புரியும் என்று நம்பப்பட்டது. வயதுமுதிர்ந்த கிழவன் தன் ஆன்மாவைப் பூதத்திற்கு ஒப்படைத்து அதன் பாதுகாப்பில் நிறுத்திவைத்தால், அவனது கூனி-உடைந்த முதுகு நிமிர்ந்து நேராகும், கிழத்தன்மை இளைமையாக மாறும் வெள்ளிய மயிர் பழுப்பு நிறம் கொள்ளும், நலிந்த இதயம் துடிக்கும் குழந்தை இதயமாக மாறும் என்றெல்லாம் நம்பப்பட்டன. மந்திரம் ஓதுவதாலும், செபம் செய்வதாலும் கெட்ட பண்புடையவன் பழிக்குப்பழி தீர்த்துக் கொள்ள முடியும். ஏழை பணக்காரன் ஆகமுடியும், பேராசை பிடித்தவன் பெரிய பதவிக்கும்-அதிகாரத்திற்கும் உயரமுடியும் என்றெல்லாம் நம்பப்பட்டன. இப்படிப்பட்ட வாழ்க்கையில், ஏற்படும் எல்லா நன்மைகளையும், பூதமே முன்னின்று செய்வதாகக் கருதப்பட்டது,

கெட்ட பூதம் ஒன்றின் ஆசைகளுக்குக் கட்டுப்படாமல்

4