பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

மதமும் மூடநம்பிக்கையும்


கெட்ட ஆவிகளுக்கெல்லாம் அரசன் சாத்தான் என்றும் நல்ல ஆவிகளுக்கெல்லாம் அரசன கடவுள் என்றும் நம்பப்பட்டன. உண்மையில் பார்க்கப்போனால், கடவுள்தான் எல்லாவற்றிற்கும் அரசன் என்றும், சாத்தான்கூட ஆண்டவனின் பிள்ளைகளிலே ஒருவன் என்றும் நம்பப்பட்டன. இந்தக் கடவுளும் இந்தச் சாத்தானும் மனிதர்களின் 'ஆன்மாக்'களை வசப்படுத்திக்கொள்வதில் போட்டி போட்டுக்கொண்டு, போரில் ஈடுபட்டனர்! கடவுள் அழியாப் பேரின்பத்தைப் பரிசுகளாகக் கொடுத்து, அழியா நரகவேதனைகளைப்பற்றி அச்சுறுத்தி வந்தார்! சாத்தான் இவ்வுலக இன்பத்தை அளித்து, உணர்வுகளுக்ககெல்லாம் நுகர்ச்சியைக் கொடுத்துக் காதல் விளையாட்டுகளையெல்லாம் காட்டி. மோட்ச உலகத்தின் மகிழ்ச்சியைப் பார்த்தும் நரகத்தின் வேதனைகளைப் பார்த்தும் சிரித்தான்! அவன், தன் குற்றக்கையால் ஐயவிதைகளைத் தூவினான். மக்களை ஆராய்ச்சி செய்யும்படியும், பகுத்தறியும்படியும், சான்று காணும்படியும், தன்னம்பிக்கை கொள்ளும்படியும் தூண்டினான் ; மக்களின் இதயத்தில் விடுதலைவேட்கையன்பை ஊனறினான்; விலங்குகளை உடைத்தெறிய அவர்களுக்கு உதவி செய்தான்; சிறைக்கூடங்களிலிருந்து தப்பிஓட அவர்களுக்கு வழி கற்பித்தான்; அவர்களைச் சிந்திக்கும்படி வற்புறுத்தினான்! இந்த வழிகளில் அவன் மக்களாகிய குழந்தைகளைக் கெடுத்தான்!

வழிபாட்டுரையால் பலியால். உண்ணாநோன்பால், சிலபல சடங்குகளைச் செய்வதால், கடவுளின் உதவியையும் நல்ல ஆவிகளின் உதவியையும் பெற்றுவிடலாம் என்று நமது தந்தைமார்கள் நம்பிவந்தனர். அவர்களுடைய வாதம் போதுமான ஆன்ற அறிவுபடைத்ததாக அமைந்-