இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
58
மதமும் மூடநம்பிக்கையும்
கடவுளால் நடந்தேறுகின்றன என்று எண்ணினர். அழிவை உண்டாக்குவது, தண்டனையை அளிப்பது, தவறச்செய்வது, மக்களாகிய குழந்தைகளைப் பாழ்படுத்துவது போன்ற செயல்களெல்லாம் கெட்ட ஆவிகளால் நிகழ்த்தப்பட்டன என்று நம்பினர். இந்த உலகம் ஒரு போர்க்களமாகத் திகழ்ந்தது! இங்கே மோட்ச உலகத்தைச் சேர்ந்தவர்களும், நரக உலகத்தைச் சேர்ந்தவர்களும் போர் தொடுத்துக் கொண்டனர்!