தேவதைகள் பறந்துவிட்டன!
61
எப்படி இயற்றப்பட்டன என்பதை அவன் அறிகிறான். அந்தக் கட்டுக்கதைகள் எல்லா மதங்களிலும் எந்த அளவுக்கு வேலை செய்கின்றன என்பதையும் அவன் அறிகிறான். பூதங்களிடத்தும், கெட்ட ஆவிகளிடத்தும் மக்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கை பன்னெடும் நூற்றாண்டுகளாக, எல்லா நாடுகளிலும் இருந்து வருகிறது என்பதை அவன் அறிகிறான். சாதாரணக் குடியானவன் போலவே, மதக் குருக்களும் மிக அழுத்தந் திருத்தமான நம்பிக்கை கொண்டிருந்தனர் என்பதையும் அவன் அறிகிறான். அந்த நாட்களில் மிகப் படித்தறிந்தவர்களும், மிக அறியாமையில் மூழ்கியவர்களும் ஒரே மாதிரியான ஏமாற்றுக்காரர்களாகத் திகழ்ந்தனர். அரசர்களும் அவரது அவையினரும், பெண்களும், பேடிகளும் போர்வீரர்களும், கலைவாணர்கள்களும், அடிமைகளும், குற்றவாளிகளும் கடவுளை எந்த அளவு அழுத்தமாக நம்பினார்களோ அதே அளவு அழுத்தமான நம்பிக்கையைத்தான் சாத்தானைப் பொறுத்தும்கொண்டிருந்தனர்.
இந்த நம்பிக்கைக்கு அடிப்படையாக எந்த ஓரு சான்றும் இருக்கவில்லை; இதுவரையிலும் இருந்ததில்லை. இந்த நம்பிக்கை எந்த உண்மை மீதும் நிலை நின்றதில்லை இந்த நம்பிக்கையானது, தவறுகளாலும்,உயர்வு நவிற்சிகளா பொய்களாலும் ஆதரிக்கப்பட்டு வந்தது. அந்தத் தவறுகள் இயல்பாகவே எழுந்தனவாக இருந்தன; உயர்வு நவிற்சிகள் மக்களின் உணர்வற்ற நிலையிலேயே வெளி வந்தன. பொய்களெல்லாம் கூடப் பொதுவாக நாணயமாகச் சொல்லப்பட்டன. இந்தத் தவறுகள், இந்த உயர்வு நவிற்சிகள் இந்தப் பொய்கள் ஆகிய இவற்றிற்கெல்லாம் அடிப்படையாக இருந்தது, பேரதிசயத்தின்பால் கொண்ட