பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

மதமும் மூடநம்பிக்கையும்


அன்பேயாகும். அதிசயம், பேராசை கொண்ட காதுகளால் கேட்கப்பட்டது; அகன்ற கண்களால் பார்க்கப்பட்டது; அறியாமை திறந்த வாயால் பருகப்பட்டது!

அறிவு வளர்ந்த ஒருவன். இந்த நம்பிக்கை வளர்ந்த வரலாற்றை நன்கு அறிவான். பல நூற்றாண்டு காலமாக நம்பிக்கை பற்றிய உண்மை, 'புனித பைபிளால்' நிலை நாட்டப்பட்டு வந்தது என்பதையும் அவன் அறிவான். பழைய வேதம், சாத்தானைப்பற்றியும் தீய ஆவிகளைப்பற்றியும் எழுதப்பட்ட கதைகளால் நிரம்பியது என்பதையும், அதுபோலவே புதிய வேதமும் நிரம்பியது ஆகும் என்பதையும் அவன் அறிவான். ஏசு கிருத்துவே சாத்தானையும், தீய ஆவிகளையும் நம்பியிருந்தவர் என்பதையும், ஆடவர் பெண்டிர் ஆகியோரைப் பிடித்திருந்த அந்தத் தீய ஆவிகளை,விரட்டுவதை, அவர் முக்கிய பணியாகக் கொண்டிருந்தார் என்பதையும் அவன் அறிவான். புதிய வேதத்தில் சொல்லப்பட்டபடி, ஏசு கிருத்துவே தீய ஆவியால் ஆசைகாட்டி மயக்கப்பட்டார் என்பதையும், சாத்தானால், அவனது கோயிலின் உச்சிக்குக் கொண்டுபோகப்பட்டார் என்பதையும் அவன் அறிவான். புதிய வேதமானது உள்ளபடியே ஆண்டவனால் மொழியப்பட்டது எனில், பூதங்கள் பிசாசுகள் இருக்கின்றன என்பதையும், அவைகள் மக்களை வசப்படுத்தியிருக்கின்றன என்பதையும் நான் ஒப்புக்கொள்கிறேன் !

இந்தத் தீய ஆவிகள் இல்லை என்று மறுப்பது - இந்தச் சாத்தான இல்லை என்று மறுப்பது, புதிய வேதத்தின் உண்மையையே மறுப்பதாகும். இருளில் பிசாசுகள் இல்லை என்று மறுப்பது, ஏசு கிருத்துவின் சொற்களையே மறுத்துக் கூறுவதாகும். இந்தப் பூதங்கள் இல்லை