பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவதைகள் பறந்துவிட்டன!

65


நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதும், அவரைப் பின் பற்றினவர்களுக்கு அவர், 'பேயாட்டுபவன் ஒருத்தியை வாழவிட்டுவிட்டு நீங்கள் துன்பம் அடையாதீர்கள்" என்று போதனை புரிந்தார் என்பதும் அறியப்படுவனவாகும்.

இந்த ஒரு கட்டளை, இந்தச் சாதாரணமான ஒருவரி போதும், ஜெஹோவா கடவுள் அல்ல என்பது மட்டுமல்லாமல், அவர் பரிதாபத்திற்குரிய – அறியாமை நிரம்பிய – மூட நம்பிக்கை மனிதர் என்பதை நிரூபிக்க பழைய வேதம் சாதாரண மனிதர்களால் அதாவது காட்டுமிராண்டிகளால் எழுதப்பட்டதாகும் என்பதை, ஐயப்பாட்டிற்குச் சிறிதும் இடமில்லாதவகையில் இந்த வரி ஒன்றே நிரூபிக்கும்.

பேயாட்டும் தன்மையிலுள்ள நம்பிக்கையைக் கைவிடுவது என்பது, பைபிளையே கைவிடுவதாகும் என்று, ஜான் வெஸ்லி கூறியது, முற்றிலும் உண்மையாகும்.

பூதத்தைக் கைவிடுவதென்றால், பின்னர் வேத புத்தகத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது? அஹாம் என்பானை ஏமாற்றுவதற்காக ஜெஹோவாவால் அனுப்பப்பட்ட பொய்யான ஆவிகளுக்குப் பின்னர் எப்படிப்பட்ட சமாதானத்தைத் தேடுவது?

பேயாட்டுவது ஒரு மூட நம்பிக்கை என்று என்று ஒப்புக் கொண்ட போதனையாளர்கள், எண்டார் என்ற பேயாட்டியைப் பற்றிய கதையினைப் படிப்பார்களா? அதளைப் பயபக்தியோடும், அடக்கத்தோடும் படிக்க அவர்களால் இயலுமா? மத உணர்வோடுதான் அதனைப் படிக்க முடியுமா? அல்லது அதனை நம்புகிறோம் என்று தான் சொல்ல அவர்களுக்கு உறுதி பிறக்குமா?

தேவதைகள் காற்றில் உலாவுகின்றன; அவைகள் ஏதும் அறியாதவர்களைப் பாதுகாக்கின்றன; அவைகள்