பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

மதமும் மூடநம்பிக்கையும்


நல்லவர்களுக்கு ஆதரவு தருகின்றன; அவைகள் தொட்டில்களைச் சூழ்ந்து நினறு குழந்தைகளுக்கு உடல்நலத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கின்றன; அவைகள் இருட்டறைகளில், தங்கள் ஒளியின் மூலம் வெளிச்சத்தை உண்டாக்குகின்றன; சிறையிலடைக்கப்பட்டவர்களுக்கு அவைகள் நம்பிக்கை அளிக்கின்றன; அவைகள் வீழ்ச்சியுற்றவர்கள் தவறு செய்தவர்கள்–தள்ளப்பட்டவர்கள்–ஆதரவற்றவர்கள் ஆகியோரைத் தொடர்ந்து போய், அவர்களுக்கு நன்மையும், அன்பும், மகிழ்ச்சியும் தருகின்றன. கெட்ட ஆவிகள் இல்லை என்பதற்கு எவ்வளவு காரணங்கள் உண்டோ, அவ்வளவு காரணங்கள் உண்டு. நல்ல ஆவிகள் இல்லை என்பதற்கும் என்பதை இப்பொழுது நாம் அறிவோம். பேய்களும் பூதங்களும் இடைக்காலங்களில் உலாவின என்பது எவ்வளவு பொய்யோ, அதே அளவு பொய்யான செய்திதான் ஆப்ரஹாமையும், சாம்சானுடைய தாயாரையும் தேவதைகள் கண்டு பேசின என்பதும், பலாம் என்ற தேவன ஏறிய கழுதையை நிறுத்திய தேவதை; நெருப்புக் குண்டத்தில் நடந்த தேவதை: ஆசிரியர்களைக் கொன்ற தேவதை; ஜோஸப்பின் கனவில் தோன்றி ஐயங்களைப் போக்கிய தேவதை என்று சொல்லப்படும் தேவதைகளெல்லாம், ஏமாற்றுக்காரர்களின் கற்பனைகளில் உதித்தவைகளாகும். மிகப் பேரதிசயங்கொண்டவைகளாக மதக் கருத்துக்களைச் சித்தரிக்கவேண்டும் என்று ஆசை கொண்டவர்களால், இட்டுக்கட்டப்பட்டவைகளே அவைகள். ஏமாற்றுக்காரர்கள், அந்தக் கதைகளை, வயது முதிர்ந்த தளர்ந்த வரிலிருந்து, துள்ளி விளையாடும் குழந்தைப் பருவத்தினர் வரையிலுமுள்ள எல்லோரிடமும் பரப்பினர்; எல்லாக் காலங்களிலும் பரப்பினர். அந்தக் கதைகள், அறியாதவர்களிடமிருந்து அறியாதவர்களிடம் தாவித் தொடர்ந்து வளர்ந்து வந்தன. கத்தோலிக்க நாடுகளைத்தவிர, ஏனைய நாடுகளில் சென்ற பல நூற்றாண்டுகளாக, 'இறக்கை கட்டிய தேவதை' எதுவும் பறந்துவந்து மக்களைப் பார்த்ததில்லை. உண்மைகளை அறிந்துகொள்ள முடியாத குருட்டு