பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அந்தக் காலமும் இந்தக் காலமும்

71


தார்! அவர்களுக்காக, அவர் கால எல்லையற்ற பெருஞ் சிறையை உண்டாக்கினார்; அங்கு அவர் தம் வெறுப்பின் பசியைத் தீர்த்துக்கொள்ள வேண்டிய அளவு உணவைப் பெற்று வந்தார்! அவர் ஏமாற்றுக்காரர்களையும், சான்று ஏதும் எதிர்பார்க்காமல் நம்புபவர்களையும் மிகவும் விரும்பினார்; அவர்களுக்காக அழியாப் பேரொளி வீசும் இடத்தை இல்லமாக அவர் ஆக்கித்தந்தார் ! கேள்வி ஏதும் கேட்காதவர்களின் கூட்டத்திடையே அவர் மிகவும் மகிழ்ச்சியுற்றிருந்தார்!

ஆனால் இந்த மோட்ச உலகம் எங்கே இருக்கிறது; இந்த நரக உலகம் எங்கே இருக்கிறது? நாம் இப்பொழுது அறிவோம். இந்த மோட்ச உலகம். மேகமண்டலத்துக்கு மேலே இல்லை என்பதை. இந்த நரக உலகம் பூவுலகத்திற்கு அடியில் இல்லை என்பதை; தொலைநோக்கு ஆடி (தூர திருஷ்டிக்கண்ணாடி) மோட்ச உலகத்தை இல்லாமற் போக்கிவிட்டது; சுழலும் உலகம் பழைய நரகத்தின் தீச் சுழல்களை அவித்துவிட்டது, மதம் கூறிய நாடுகளும், மதம் கற்பனை செய்த உலகங்களும் மறைந்தொழிந்து விட்டன. மோட்ச உலகம் எங்கே இருக்கிறது என்பதை எவரும் அறியமாட்டார்கள்; அறிந்திருப்பதாக யாரும் பாசாங்கு செய்யமுடியாது. நரகம் இருக்கும் இடத்தை யாரும் அறியமாட்டார்கள்; அதனை அறிந்திருப்பதாக யாரும் பாசாங்கு செய்யமுடியாது இப்பொழுது பல மதவாதிகள், மோட்சம் என்பதும், நரகம் என்பதும் இடங்கள் அல்ல என்றும், அவை மன நிலைகளையே, நிலைமைகளையே குறிப்பனவாகும் என்றும் கூறுகின்றனர். கடவுள்களிடத்தும், பூதங்களிடத்தும் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை உலகம் முழுவதும் நிலவியிருக்கிறது மனிதன் நல்லதுக்குப் பின்னால் கடவுளை நிறுத்துகிறான்; தீதுக்குப் பின்னால் பூதத்தை நிறுத்துகிறான்; நலத்துக்குப் பின்னால் ஞாயிற்றின் ஒளியை வைக்கிறான்; நல்ல