பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

மதமும் மூடநம்பிக்கையும்


அறுவடைக்குப் பின்னால் நல்ல கடவுளை வைக்கிறான்; நோய்க்குப் பின்னால் தீய வாய்ப்பைப் பார்க்கிறான்; இறப்புக்குப் பின்னால் கொடிய பேயைப் பார்க்கிறான்.

கடவுள்களும் பூதங்களும் வாழ்கிறார்கள் என்பதற்கு ஏதேனும் நல்ல சான்று இருக்கிறதா? கடவுள் இருக்கிறார். என்பதற்கும், பூதம் உண்டு என்பதற்கும் ஒரேவிதமான காரணந்தான் கூறப்படுகின்றது. இந்த இரண்டு வணக்க பொருள்களும் கற்பித்துக் கொள்ளப் பட்டவைகளே; ஒவ்வொன்றும் இருக்கக்கூடும் என்று ஊகிக்கப்படுவதேயாகும். அவைகள் கண்ணால் பார்க்கப்பட்டதில்லை; அவைகள் ஐம்புல உணர்ச்சிகளின் எல்லைக்குள் தட்டுப்பட்டதில்லை. வயதான கிழவி, பூதம் இருந்து தீரவேண்டும், இல்லையானால் அதனைப்போலவே எப்படிப் படம் வரைந்து காட்டமுடியும் என்று கேட்கிறாள்; அவள் மதக் கருத்துக்களில் பயிற்சி பெற்றவள் போலவும், கடவுளைப் பற்றிய செய்திகளில் தேர்ச்சி அடைந்தவள் போலவும் கேட்கிறாள்!

பூதம் இருக்கிறது என்பதில் எந்த அறிவுள்ள மனிதனும் இப்பொழுது நம்பிக்கை வைப்பதில்லை; கொடுந்தோற்றமுடைய பேய்க்காக அவன் அஞ்சுவதுமில்லை; ஆராய்ந்து பார்க்கும் திறம்படைத்த பெரும்பாலான மக்கள், வழிபடும், சொந்தக் கடவுளாகிய, 'படைக்கும் கடவுளை'க் கைவிட்டு விட்டனர். அவர்கள். இப்பொழுது பெரும்பாலும் 'காண முடியாதது.' 'எல்லையற்ற பேராற்றலாவது' என்றெல்லாம் பேசத்தலைப்பட்டு விட்டனர். ஆனால், அவர்கள் 'ஜெஹோவா'வை, 'ஜூபிடருடன் சேர்த்துவைத்து எண்ண முற்பட்டு விட்டனர். அவர்கள், அவைகளைப் பழங் காலத்தில் கொண்டாடிய உடைந்த பொம்மைகள் என்றே கருதுகின்றனர்.

சான்று வேண்டி நிற்கிற-உண்மையை அறியவிரும்புகிற ஆண்களும், பெண்களும் தலையெழுத்துக்களைப் பற்றிக் கவலை கொள்வதில்லை. அதிசயங்கள் என்று சொல்லப்படுபவைகளைப் பற்றிக் கவலையுறுவதில்லை. அதிர்ஷ்ட துர்