இது தெரியாதாம் அது தெரியுமாம்!
79
லத்தை மறந்துவாழும் தன்மையை அவர் ஒருபொழுதும் பழக்கப்படுத்திக் கொண்டதில்லை; அவர் ஆசைக்கு அகப் பட்டதில்லை; அச்சத்தாலோ அல்லது விருப்பத்தாலோ அவர் தொடப்பட்டதில்லை; அவருக்குத் தேவை எப்பொழுதும் ஏற்பட்டதில்லை ! பின்னர், ஏன் அவர் நமது புகழ்ச்சியை விரும்பவேண்டும், கேட்க வேண்டும் ?
இந்தக் கடவுள் இருக்கிறார் என்பதையோ, வழிபாட்டுரையைக் கேட்டார், அதற்குப் பதிலிறுத்தார். என்பதையோ எவனொருவனாவது அறிவானா ? அவர் இந்த உலகத்தைக் கட்டி ஆளுகிறார். மக்களின் நடவடிக்கைகளில் அவர் தலையிடுகிறார், அவர் நல்லவர்களைக் காப்பாற்றுகிறார், அவர் கெட்டவர்களைத் தண்டிக்கிறார் என்பதெல்லாம், மக்களால் அறியப்பட்டவைகளா? இதற்கான சான்று மனித சமுதாய வரலாற்றில் காண முடியுமா? கடவுள் இவ்வுலகத்தை ஆளுகிறார் என்றால், நல்லதுக்கெல்லாம் நாம் அவரைக் காரணமாக்குவானேன்; இதே நேரத்தில் தீதுக்கெல்லாம் அவரைக் குற்றஞ்சாட்டாமலிருப்பானேன்? இந்தக் கடவுளை ஒப்புக்கொள்வதற்காக, நாம் நல்லதை நல்லது என்று சொல்லவேண்டும், தீதையும் நல்லது என்று சொல்லவேண்டும்! எல்லாம் கடவுளாலேயே இயங்குகின்றன என்றால், அவருடைய செயல்களுக்குள்ளே நாம் வேற்றுமைகளைக் கற்பிக்கக்கூடாது; எல்லையற்ற பேரறிவு படைத்த, எல்லாம் வல்ல, நல்ல தன்மை கொண்ட கடவுளின் செயல்களுக்குள்ளே நாம் வேற்றுமைகளைக் கற்பிக்கக்கூடாது! கதிரவனின் ஒளியையும் அறுவடையும் கொடுப்பதற்காக நாம் அவருக்கு நன்றி செலுத்துகிறோம் என்றால், பிளேக்கையும் பஞ்சத்தையும் கொடுப்பதற்காகவும் நாம் நன்றி செலுத்தத்தானே வேண்டும்! அவர் அளிக்கும் விடுதலைக்காக அவருக்கு நன்றி செலுத்துகிறோம் என்றால், அடிமை, தன்னுடைய விலங்கு பூட்டப்பட்ட கைகளை உயர்த்திக், கடவுளை வணங்கித், தன்னுடைய உழைப்பிற்குக் கூலி கொடுக்காததற்காகவும், சாட்டையடியால் முதுகில் தழும்புகள் ஏற்றுக்கொண்டதற்-