பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

மதமும் மூடநம்பிக்கையும்


காகவும், கடவுளுக்கு நன்றி செலுத்தத்தானே வேண்டும் ! நாம் வெற்றிக்காக அவருக்கு நன்றி செலுத்துகிறோம் என்றால், தோல்விக்காகவும் நாம் நன்றி செலுத்தத்தானே வேண்டும்!

இப்பொழுதுதான் சில நாட்களுக்கு முன்பு, நமது குடியரசுத் தலைவர், சாண்டியாகோ என்ற இடத்தில் நமக்கு வெற்றி கிடைத்ததற்காக, ஒரு பிரகடனத்தின்மூலம், கடவுளுக்கு நன்றி செலுத்திக்கொண்டார். மஞ்சள் காய்ச்சல் என்ற நோயை அனுப்பி வைத்ததற்காக, அவர் கடவுளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்ளவில்லை. பொருத்தமான முறையில் பார்க்கப்போனால், நமது குடியரசுத் தலைவர், இரண்டு செயல்களுக்காகவும் சமமான அளவில், கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டிருக்க வேண்டாமா!

உண்மை என்னவென்றால், நல்ல-தீய ஆவிகளும், கடவுள்களும் பூதங்களும், மனித அனுபவத்திற்கு மிக அப்பாற்பட்டவைகளாகும்; நமது எண்ணங்களின் எல்லைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவையாகும்; நமது சிந்தனைக்கு மிக அப்பாற்பட்டவையாகும்.

மனிதன் சிந்திக்கவேண்டும்; அவன் அவனுடைய புலனுணர்ச்சிகளை யெல்லாம் பயன்படுத்தவேண்டும்; அவன் ஆராய்ச்சி செய்யவேண்டும்; அவன் பகுத்தறிந்து பார்க்க வேண்டும். சிந்திக்கத் தெரியாத மனிதன், மனிதனைவிட மிகத் தாழ்ந்தவனாகிறான்; சிந்திக்க மறுப்பவன், அவனுக்குத் தானே துரோகியாகிறான்; சிந்திக்க அஞ்சுபவன், மூட நம்பிக்கையின் அடிமையாகிறான்!