பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

மதமும் மூடநம்பிக்கையும்


கருதிக்கொண்டது; மூட நம்பிக்கை, நலம்புரிவோரைச் சிறையிலடைத்தது; சிந்தனையாளர்களைச் சித்ரவதை செய்தது; உடலைச் சங்கிலியால் பிணைத்தது; உள்ளத்திற்கு விலங்குகளிட்டது; பேச்சுரிமை முழுவதையும் அழித்தது! மூடநம்பிக்கை எல்லாவித வழிபாட்டுரைகளையும், சடங்கு முறைகளையும் நமக்கு அளித்தது; கீழே விழுதல் முழங்காற் படியிடுதல், வணங்கி நிற்றல் போன்றவைகளெல்லாம் கற்றுக்கொடுத்தது; மக்களை மக்களே வெறுப்பதற்கும் மகிழ்ச்சியை அழிப்பதற்கும், மக்களின் உடலில் காயங்களை உண்டுபண்ணுவதற்கும், புழுதியில் கிடந்து புரளுவதற்கும் மனைவியரையும், குழந்தைகளையும் விட்டுவிட்டு ஓடுவதற்கும் உடன் வாழ்வோரை வெறுத்து ஒதுக்குதற்கும், பயனற்ற நோன்பிலும் வழிபாட்டுரையிலும் வாழ்நாட்களைக் கழிப்பதற்கும் கற்றுக்கொடுத்தது! மூட நம்பிக்கை, மனிதாபிமானமாவது மிகக்கீழானது, தாழ்ந்தது, கெட்டது என்று கற்றுக்கொடுத்தது; தந்தையார்களைக் காட்டிலும் பாதிரிமார்கள் தூய்மையானவர்கள் என்றும், தாய்மார்களைக் காட்டிலும் பெண் துறவிகள் புனிதமானவர்கள் என்றும் கற்றுக்கொடுத்தது: உண்மையைக் காட்டிலும் பக்தி நம்பிக்கையே உயர்ந்தது என்று கற்றுக்கொடுத்தது; ஏமாற்றுத்தனம் மோட்சத்திற்கு அனுப்பிவைக்கும் என்று கற்றுக்கொடுத்தது; ஐயப்படுவது நரகத்திற்குக் கொண்டு போய்ச் சேர்க்கும் வழிஎன்று கற்றுக்கொடுத்தது; அறிவை விட நம்பிக்கையே சிறந்தது என்று கற்றுக்கொடுத்தது; எதற்கும் சான்று கேட்பது ஆண்டவனைப் பழிப்பதாகும் என்று கற்றுக்கொடுத்தது! மூடநம்பிக்கை முன்னேற்றத்திற்கு எப்பொழுதும் பகையாகவே இருந்து வருகிறது. எப்பொழுதும் பகையாகவே இருந்துவரும்; கல்வியின் எதிரியாக எப்பொழுதும் இருந்துவருகிறது: வரும்; உரிமையின் கொலையாளியாக எப்பொழுதும் இருந்து வருகிறது,வரும்! மூடநம்பிக்கை அறிந்த ஒன்றை அறியாத ஒன்றிற்கும், நிகழ்காலத்தை எதிர்காலத்திற்கும், இந்த உண்மை உலகத்தைக் கண்டறியாத வருங்கால உலகத்