பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இது தெரியாதாம் அது தெரியுமாம்!

85


திற்கும் பலியிட்டுவிடுகிறது. மூடநம்பிக்கை, சுயநலம் நிறைந்த ஒரு மோட்ச உலகத்தையும் பழிக்குப்பழிவாங்கும் ஒரு நரக உலகத்தையும் நமக்கு அளித்திருக்கிறது! மூட நம்பிக்கை உலகில் வெறுப்பையும், போரையும், குற்றத்தையும் மிகக் கீழ்த்தரமான கொடுமையையும், மிக அருவருப்பான கர்வத்தையும் நிரப்பி வைத்தது! மூட நம்பிக்கை, உலகம் முழுவதுமுள்ள அறிவியலின் ! ஒரே எதிரியாக இருந்து வருகிறது!

மூட நம்பிக்கை என்னும் இந்தப் பயங்கர விலங்கினால், நாடுகளும், இனங்களும் மிகவாக அழிக்கப்பட்டிருக்கின்றன. ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகளாகக் கடவுளின் நம்பிக்கைக் குகந்த பிரதிநிதி, இத்தாலியில் வாழ்ந்து கொண்டு வருகிறார். அந்த நாடு தேவாலயங்களாலும், மடாலயங்களாலும், சத்திரங்களாலும், சாவடிகளாலும் நிரப்பப்பட்டிருக்கிறது; எல்லாவகையான போதகர்களாலும், புனித மனிதர்களாலும் அந்த நாடு நிரப்பப்பட்டிருக்கிறது. பல நூற்றாண்டுக் காலம், இத்தாலி, பக்திமான்கள் கொடுத்த பொன்னால் செழிப்புற்றிருந்தது. எல்லாச் சாலைகளும் ரோம் நகரை நோக்கியே சென்றன; அந்தச் சாலைகளெல்லாம். காணிக்கைகளை ஏந்திய புனித யாத்ரீகர்களால் நிறையப் பெற்றிருந்தன. அப்படியிருந்தும், எல்லாவகையான வழிபாட்டுரை கொண்டிருந்தும். இத்தாலி கீழ்நோக்கி சென்று, வீழ்ச்சியுற்றுச் செத்துப் புதைந்தது என்றுதான் சொல்லவேண்டும்; காவர், மாஜினி, காரீ பால்டி போன்றவர்கள் தோன்றாமலிருந்திருப்பார்களே யானால், அது இதுநேரம் மண்ணோடு மண்ணாய்ப் புதைந்து, கல்லறைக்குள் சென்றிருக்கும் அது வறுமையும் துன்பமும் அடைவதற்குப் புனித கத்தோலிக்க தேவாலயத்திற்கும் கடவுளின் நம்பிக்கையான பிரதிநிதிகளுக்குமே