பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இது தெரியாதாம் அது தெரியுமாம்!

87


பரிதாபத்திற்குரியவர்கள்! கடவுள் தன்மை கொண்ட மேரி யாதொன்றையும் கேட்டாளில்லை. சில நாடுகள் புதிய நாளின் விடியலில் இருந்தன; ஆனால் ஸ்பெயின் மட்டும் இரவிலேயே தங்கியிருந்தது. சிந்தித்த மனிதர்களையெல்லாம், அது தீயைக்கொண்டும் வாளைக்கொண்டும் தீர்த்துக் கட்டியது. மத விசாரணைக் குழுவினால் விசாரிக்கப்பட்டவர்களின் மீது கொலைத் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்படும் நாளே ஸ்பெயினின் சிறந்த திருவிழா நாளாகும். மற்ற நாடுகள் வளர்ந்து கொண்டு போகும்போது. ஸ்பெயின் மட்டும் தேய்ந்து கொண்டு சென்றது. நாளுக்குநாள் அதனுடைய அதிகாரம் குறைந்து கொண்டே வந்தது; ஆனால் அதனுடைய பக்தி நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே சென்றது குடியேற்ற நாடுகளை, அது ஒன்றன்பின் ஒன்றாக இழந்து கொண்டே வந்தது; ஆனால் அது, தன்னுடைய மதக் கொள்கையைமட்டும் வைத்துக் காப்பாற்றிக் கொண்டேயிருந்தது, சில நாட்களுக்கு முன்புதான், அது தன்னுடைய கடவுளையும், புரோகிதர்களையும், மந்திரங்களையும், தாயத்துக்களையும், புனிதத் தண்ணீரையும், உண்மைச் சிலுவையின் மரத்துண்டுகளையும் நம்பிக் கொண்டு,பெரிய குடியரசு நாட்டின் மீதுபோர்தொடுத்தது பாதிரிமார்கள்: படையினரை வாழ்த்தியனுப்பினர். புனிதத் தண்ணீரைக் கப்பல்கள் மீது தெளித்தனர். அப்படியிருந்தும், அதனுடைய படைகள் தோற்கடிக்கப்பட்டன; அதனுடைய கப்பல்கள் தாக்கப்பட்டு, உடைக்கப்பட்டுக் கொளுத்தப்பட்டன. அது ஆதரவற்ற நிலையை அடையும் போது, நட்புறவு செய்துகொள்ளப் பணிந்து சென்றது. ஆனாலும் அது தன்னுடைய மதக்கொள்கையை அப்பொழுதும் அப்படியே கொண்டிருந்தது; அதனுடைய மூடநம்பிக்கை அழிந்துவிடவில்லை. பரிதாபத்திற்குரிய ஸ்பெயின்! மதத்திற்கு இரையாகி பக்திநம்பிக்கையால் பாழடைந்தது.

போர்ச்சுகல். நாளுக்குநாள் ஏழையாகிச் செத்துக் கொண்டிருக்கிறது; என்றாலும் அது மத பக்தியைப் பற்றிக்