இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
88
மதமும் மூடநம்பிக்கையும்
கொண்டு நிற்கிறது. அதனுடைய வழிபாட்டுரைகள் விடை யிறுக்கப்பட்டதில்லை; ஆனாலும் அது இன்னமும் அவைகளை ஓதிக்கொண்டிருக்கிறது, ஆஸ்திரியா, கிட்டதட்ட அழிந்து விட்டது; மூடநம்பிக்கைக்கு இரையாகிவிட்டது. ஜெர்மனி இரவின் இருட்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. கடவுள், கெய்ஸரை அதன் அரியணையில் ஏற்றிவைத்துள்ளார். மக்கள் அவனுக்கு அடங்கியே நடக்கவேண்டும். தத்துவாசிரியர்களும் அறிவியல் அறிஞர்களும், ஆண்டவன் 'அனுமதி'யோடு ஆளும் அவ்வரசன் முன்னால் மண்டியிட்டுத் தாழ்ந்துகிடக்கிறார்கள்; அரசன் அவர்களைப்பொம்மைகளாக மதிப்பிடுகிறான்; எல்லாம் மூடநம்பிக்கையின் விளைவு!