பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

மதமும் மூடநம்பிக்கையும்


இந்தக் கடவுளருளிய நூலை எவன் படிக்க நேரிடுகிறானோ அவன், இதில், முன்னுக்குப் பின் முரண்பாடுகள், தவறுகள் இடைச் சேர்க்கைகள் ஆகியவற்றைக் கண்டு, தன்னுடைய அமைதியான உயிரை வாட்டி வதைத்துக்கொள்ள வேண்டியவனாவான். அவன் இதைப் படிக்கும்போது, சிந்தித்துப் பார்க்கவோ, பகுத்தறிந்து பார்க்கவோ அவனுக்குச் சிறிதும் உரிமை கிடையாது. இதை நம்ப வேண்டியதுதான் அவன் செய்ய வேண்டிய கடமையாகும்.

கோடிக்கணக்கான மக்கள், இந்த நூலைப்படிப்பதிலும், முன்னுக்குப் பின்னுள்ள முரண்பாடுகளைப் பொருத்திக் காண்பிப்பதிலும், பொருளற்றவைகளைத் தெளிவாக்குவதிலும், அபத்தமானவைகளை விளக்கிக் காட்டுவதிலும் தங்கள் வாழ்நாட்களை வீண் நாட்களாக ஆக்கியிருக்கிறார்கள். இப்படிச் செய்யும்போது அவர்கள், ஒவ்வொரு குற்றத்திற்கும், ஒவ்வொரு கொடுமைக்கும் சமாதானம் கூறிக் கொள்கிறார்கள். இதிலுள்ள முட்டாள் தனங்களில், அளவிடற்கரிய அறிவுடைமை இருப்பதாகக்கண்டு மகிழ்ச்சி கொள்கிறார்கள். கடவுள் தன்மை கொண்ட வாக்கியங்களிலிருந்து, நூற்றுக்கணக்கான கோட்பாடுகளை உருவாக்கியிருக்கிறார்கள். எந்த இரண்டு வாசகர்களும் இதன் பொருளை ஒருபடியாக ஒத்துக்கொண்டார்கள் என்று சொல்லுவதற்கில்லை. ஆயிரக்கணக்கானவர்கள் ஹிபுரு, கிரேக்கம் முதலிய மொழிகளைக் கற்றறிந்திருக்கிறார்கள்; காரணம் பழைய-புதிய வேதங்களை, அவை முதலில் எழுதப்பட்ட அந்த மொழிகளிலேயே படித்துத் தெரிந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பது அவர்களது எண்ணம், அவர்கள் எவ்வளவுக் கெவ்வளவு அதிகமாகப் படித்தார்களோ, அவ்வளவுக் கவ்வளவு அவர்கள் ஒருவரோடொருவர் வேறுபட்டுக் காணப்பட்டார்கள். இந்த ஒரே நூலில் அவர்கள் இரு வேறுபட்ட கருத்துக்களையும் நிரூபித்துக் காட்டுவர்: ஒவ்வொருவரும் அழிந்து படவேண்டும் என்பதையும் காட்டுவர். எல்லோரும்