பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடவுள் அருளியதா கவைக்கு உதவாததா!

91


காப்பாற்றப்பட வேண்டும் என்பதையும் காட்டுவர்; இதில் அடிமைத்தனம் ஆண்டவன் சம்மதம் பெற்றது என்பதும் இருக்கும். எல்லோரும் உரிமையோடு வாழவேண்டும் என்பதும் இருக்கும். பல தார மணம் உரிமையின் பாற்பட்டது என்பதும் இருக்கும். ஒரு மனிதன் ஒரு மனைவிக்கு மேல் கொண்டிருக்கக்கூடாது என்பதும் இருக்கும்; ஆற்றல்களெல்லாம் ஆண்டவன் கட்டளையால் இருக்கின்றன என்பதும் இருக்கும். இருக்கும் ஆற்றல்களை மாற்றவும், அழிக்கவும் மனிதர்கள் உரிமை படைத்தவர்கள் என்பதும் இருக்கும்; மனிதனுடைய நடவடிக்கைகளெல்லாம் முன்கூட்டியே எழுதப்பட்டவை எல்லையற்ற காலந்தொட்டு இருந்துவருபவை என்பதையும் காட்டுவர். மனிதன் சுயேச்சை கொண்டவன் என்பதும் இருக்கும்; இழிந்த மதத்தினர் எல்லோரும் அழிந்துபடுவார்கள் என்பதும் இருக்கும். இழிய மதத்தினர் எல்லோரும் காப்பாற்றப்படுவார்கள் என்பதும் இருக்கும்; இயற்கை காட்டும் ஒளி வழி வாழ்வோர் எல்லையில்லாத் துன்பங்களை ஏற்பர் என்பதும் இருக்கும், தண்ணீர் தெளிக்கப்பட்டு 'ஞான ஸ்நானம்' செய்யவேண்டும் என்பதும் இருக்கும்; 'ஞான ஸ்நானம் பெறாமல் உயிர் உய்வதற்கு வழிஇல்லை என்பதும் இருக்கும், 'ஞானஸ்நானத்தால் பயனில்லை என்பதும் இருக்கும்; கடவுளின் தந்தை-மகன்-பூதம் மூன்று தன்மையையும் நம்பவேண்டும் என்பதும் இருக்கும். தந்தைக் கடவுளின் தன்மையை மட்டும் நம்பினால் போதும் என்பதும் இருக்கும்; 'ஹீபுருக் குடியானவர்' கடவுளாக இருந்தார் என்பதும் இருக்கும், அவர் அரை மனிதர், அவருடைய உண்மையான தந்தையாக இல்லாதவரும், ஆனால் தந்தை என்று சொல்லப்படுபவருமான ஜோஸ்பின் மூலமாக டேவிட் குருதியில் அவர் தோன்றியவர், ஆதலால் கிருத்துவைக் கடவுள் என்று நம்பவேண்டிய அவசியமில்லை என்பதையும் காட்டுவர்; அவருக்கு முன்னால் புனிதபூதம் வந்ததை நீங்கள் நம்பவேண்டும் என்பதையும் காட்டுவர். அதனை நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும்