92
மதமும் மூடநம்பிக்கையும்
அதனால் ஒரு வேறுபாடும் தோன்றாது என்பதையும் காட்டுவர்; ஞாயிற்றுக்கிழமையைப் புனித நாளாகக் கொண்டாட வேண்டும் என்பதையும் காட்டுவர், கிருத்து அப்படி ஒன்றும் சொல்லவில்லை என்பதையும் காட்டுவர்; கிருத்து தேவாலயம் ஒன்றை நிறுவினார் என்பதையும் காட்டுவர், அவர் எந்த தேவாலயத்தையும் நிறுவவில்லை என்பதையும் காட்டுவர்; இறந்து பட்டவர்களெல்லாம் எழுப்பப்படுவார்கள் என்பதையும் காட்டுவர், அப்படி எழுப்புதல் என்பது இல்லை என்பதையும் காட்டுவர்; கிருத்து மீண்டும் வருவார் என்பதையும் காட்டுவர், அவர் தமது கடைசி வருகையை முடித்துவிட்டார் என்பதையும் காட்டுவர், கிருத்து நரகத்திற்குச் சென்று, அங்கு சிறையலிருக்கும் ஆவிகளுக்கு உபதேசம் புரிந்தார் என்பதையும் காட்டுவர். அவர் அப்படி ஒன்றும் செய்யவில்லை என்பதையும் காட்டுவர்: பூதங்களெல்லோரும் நரிகத்திற்குப் போவார்கள் என்பதையும் காட்டுவர். இல்லை, அவர்களெல்லோரும் மோட்சத்திற்குப் போவார்கள் என்பதையும் காட்டுவர்; பைபிளில் சொல்லப்பட்ட அதிசயங்களெல்லாம் செய்து காட்டப்பட்டன என்பதையும் காட்டுவர், அவைகளில் சில செய்து காட்டப்படவில்லை, ஏனென்றால் அவை சிறுபிள்ளைத் தனமாகவும், முட்டாள் தனமாகவும், மடத்தனமாகவும் இருக்கின்றன என்பதையும் காட்டுவர், பைபிளிலுள்ள எல்லாப் பகுதிகளும் கடவுளால் சொல்லப் பட்டன என்பதையும் காட்டுவர், அவைகளில் சில கடவுளால் சொல்லப்படாதவை என்பதையும் காட்டுவர்; செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் தனித்தனியாகப் பிரித்துக் காணும்போதும், ஒரே பொதுவான தீர்ப்பு இருக்கவேண்டும் என்பதையும் காட்டுவர், பொதுப்படையான தீர்ப்பு என்று ஒரு பொழுதும் இருக்கவேண்டிய அவசியமில்லை என்பதையும் காட்டுவர்; ரொட்டித்துண்டும் திராட்சை ரசமும் கடவுள் சதையாகவும் குருதியாகவும் மாறுகின்றன என்பதையும் காட்டுவர். அவைகள் அப்படி மாறவில்லை என்பதையும் காட்டுவர்; கடவுளின் தந்தை