கடவுள் அருளியதா கவைக்கு உதவாததா!
93
–மகன்–பூதம் ஆகிய முத்தன்மையுருவம் படைத்தவர் என்பதையும் காட்டுவர், கடவுளுக்குச் சதையோ இரத்தமோ இல்லை என்பதையும் காட்டுவர், பாபங்களைக் கழுவுமிடம் ஒன்று உண்டு என்பதையும் காட்டுவர் அப்படி ஒரு இடமும் இல்லை என்பதையும் காட்டுவர்; 'ஞானஸ்நானம்' செய்யப்படாத குழந்தைகள் அழிந்துபடும் என்பதையும் காட்டுவர். அவைகள் காப்பாற்றப்படும் என்பதையும் காட்டுவர்; சீடர்களின் கோட்பாட்டை நாம் நம்பவேண்டும் என்பதையும் காட்டுவர், சீடர்கள் ஒரு கோட்பாட்டையும் ஏற்படுத்தவில்லை என்பதையும் காட்டுவர்; புனிதபூதந்தான கிருத்துவின் தந்தையாகும் என்பதையும் காட்டுவர், ஜோஸப்பே கிருத்துவின் தந்தையாவார் என்பதையும் காட்டுவர்; கடவுள் விரோதிகள் கொல்லப்பட வேண்டும் என்பதையும் காட்டுவர்; தீமையை நீங்கள் எதிர்க்கக்கூடாது என்பதையும் காட்டுவர், நம்பாதவர்களை நீங்கள் கொல்ல வேண்டும் என்பதையும் காட்டுவர், உங்களுடைய பகைவர்களிடம் நீங்கள் அன்பு காட்டவேண்டும் எனபதையும் காட்டுவர்; நீங்கள் நாளைக்கு ஒன்று வேண்டுமே என்று எண்ணக்கூடாது. என்பதையும் எடுத்துக்காட்டுவர், தொழில் நடத்திச் சம்பாதித்துச் சேர்ப்பதிலே கண்ணுங் கருத்துமாக இருக்க வேண்டும் என்பதையும் காட்டுவர்: உங்களிடத்திலுள்ளதைக் கேட்பவர்களுக்கெல்லாம் கொடுங்கள் என்பதையும் காட்டுவர், தனது வீட்டுக்கு வேண்டியதைச் சேர்த்துக்கொள்ளாதவன், மதாதரியைக் காட்டிலும் தாழ்ந்தவன் என்பதையும் காட்டுவர் !
இந்த எல்லாக் கோட்பாடுகளையும், இந்த எல்லா முரண்பாடுகளையும் பாதுகாக்கவேண்டிய, ஆயிரக்கணக்கான நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன: இலட்சக்கணக்கான விரிவுரைகள் ஆற்றப்பட்டிருக்கின்றன; கணக்கற்ற வாள்கள் குருதியில் தோய்த்தெடுத்துச் சிவப்பாக்கப்பட்டிருக்கின்றன; ஆயிரமாயிரம் இரவுகள், மாறுபட்டவர்களை