94
மதமும் மூடநம்பிக்கையும்
எரித்த கொள்ளிக் கட்டைகளின் தீயொளியால், வெளிச்சமாக்கப்பட்டிருக்கின்றன!
பல நூற்றுக்கணக்கான விளக்கவுரைக்காரர்கள். வெளிப்படையாகத் தெரியக்கூடியவைகளைத் தத்துவார்த்தம் பொதிந்தனவாகவும், ஆழ்ந்த கருத்துக்கள் நிறைந்தனவாகவும் செய்து காட்டுகிறார்கள். நாட்களையும், பெயர்களையும், எண்களையும், வழிவழிமுறைப் பட்டியலையும், மனித அறிவுக்கு எட்டாதனவாகக் கடவுள் தன்மை நிறைந்தனவாக அவர்கள் ஆக்கிக் காட்டியுள்ளார்கள். அவர்கள், கவிக்கற்பனையை மிகச் சாதாரண நிலைமைகளாகவும், கட்டுக்கதைகளை வரலாறுகளாகவும், கற்பனை உருவங்களை முட்டாள் தனமானவையும் நடக்கமுடியாதனவும் ஆன உண்மைகளாகவும் செய்துள்ளார்கள். அவர்கள் புராணக் கதைகளோடும் அசரீரி வாக்குகளோடும் கடவுள் காட்சிகளோடும் கனவுகளோடும், ஏமாற்றுக்களோடும் தவறுகளோடும், கற்பனைச் செய்திகளோடும், அதிசயங்களோடும், அறியாதவர்களின் தவறுகளோடும் பைத்தியக்காரர்களின் கூற்றுக்களோடும், நோய் கொண்டவரின் உளறல்களோடும் மூளையைப் போட்டுக் குழப்பிக்கொண்டிருக்கிறார்கள். கோடிக்கணக்கான புரோகிதர்களும், இந்தக் கடவுளருளிய நூலில் பல அதிசயங்களைத் தாங்களாகவே சேர்த்துள்ளார்கள்; விளக்கங் கொடுப்பதன் மூலமும், முட்டாள் தனத்தின் அறிவுடமையைக் காண்பிப்பதன் மூலமும், அறிவுடைமையின் முட்டாள் தனத்தைக் காண்பிப்பதன் மூலமும், கொடுமையின் அருள் திறத்தைக் கூறுவதன் மூலமும், நடக்கமுடியாதவைகளின் நடக்கக்கூடிய தன்மையை விளக்குவதன் மூலமும் பற்பல அதிசயங்களைப் புதிதாகச் சேர்த்துள்ளார்கள்.
மதவாதிகள் பைபிளை ஒரு ஆண்டையாகவும், மக்களை அவரின் அடிமைகளாகவும் ஆக்கினார்கள். இந்த நூலை வைத்துக்கொண்டு அவர்கள் அறிவின் பல்வேறு திறங்-