கடவுள் அருளியதா கவைக்கு உதவாததா!
95
களையும், மனிதனின் இயற்கையான மனிதத் தன்மையையும் அழித்துவிட்டார்கள். இந்த நூலை வைத்துக்கொண்டு, அவர்கள், மனித இதயங்களிலிருந்த பரிவைப் போக்கிவிட்டார்கள்; நீதியும் நேர்மையும் கொண்ட கருத்துக்களையெல்லாம் தாழ்த்திவிட்டார்கள்; அச்சம் என்னும் இருட்டறையில் மனித உயிர்களைச் சிறை அடைத்துவிட்டார்கள்; நாணயமாக ஐயப்படுவதைக் குற்றம் என்று செய்துவிட்டார்கள் !
அச்சத்தின் காரணமாக, இவ்வுலகம் ஏற்ற துன்பங்களின் அளவைச் சிந்தித்துப் பாருங்கள்! மனங்குழம்பிய வெறியர்களாக விரட்டப்பட்ட கோடிக்கணக்கான மக்களை, எண்ணிப் பாருங்கள்! பயங்கரமானவைகளாகத் தீட்டிக் காட்டப்பட்ட இரவுகளைப் பற்றிச் சற்று சிந்தித்துப் பாருங்கள்; அச்சமூட்டும் பிசாசுகளாலும், பறந்துகொண்டும், ஒடிக்கொண்டும், ஊர்ந்துகொண்டும் இருந்த பேய்களாலும், படமெடுத்துச் சீறி எழும் பாம்புகளாலும், கொடூரமான எரியும் கண்களோடு உருவமற்று விளங்கிய கொடிய பிசாசுகளாலும் நிரப்பப்பட்ட இரவுகளைப்பற்றிச் சிந்தித்துப் பாருங்கள் !
இறப்பைப்பற்றிய அச்சம், கால எல்லையற்ற துன்பத்தைப் பற்றிய அச்சம், நரக நெருப்பிலும் நரகச் சிறையிலும் என்றென்றும் போட்டுப் பழிவாங்குவது பற்றிய அச்சம், நீங்காத நாவறட்சி பற்றிய அச்சம், நீங்காத வருத்தம் பற்றிய அச்சம், செருமுதலும் பெருமூச்செறிதலும் பற்றிய அச்சம், வலி தாங்காமல் கதறும் கூச்சல் பற்றிய அச்சம், எல்லையற்ற வலியினால் முணுமுணுப்பது பற்றிய அச்சம் ஆகிய பல்வேறு வகை அச்சங்களைப்பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்!