இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
96
மதமும் மூடநம்பிக்கையும்
கெட்டிப்பட்ட இதயங்கள், உடைந்த நெஞ்சுகள், இழைக்கப்பட்ட கொடுமைகள், தாங்கிக்கொள்ளப்பட்ட வேதனைகள், இருட்டடையச் செய்யப்பட்ட வாழ்க்கைகள் ஆகியவற்றைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள் !
கடவுள் அருளியதாகச் சொல்லப்படும் இந்த பைபிள், கிருத்தவ உலகத்திற்கு ஒரு சீர்கேடாக இருந்து வருகிறது, இருக்கிறது; இது கடவுளருளியதாகக் கருதப்படும் காலம் வரையிலும், அப்படியேதான் இருந்து தீரும்!