பக்கம்:மதிவாணன்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) ம தி வாணன் 221

ஆம். நந்தக் தஞ்சைவாணர் மகன் மதிவாணன்' என்று சொல்லிக் கொண்டே மந்திரியார் உட்புகுந்தனர். " .

மாயவனே கின்ற நிலையிலேயே பலவாறுங் கருதத் தொடங்கினன். அந்தோ! பாவியேன் இவர் கூறியாங்கே நேற்றே வாராமற்போயினெனே! வந்திருப்பேனேல், மாற்றம் பிறழ்ந்தேனென்று இவர் மதிக்கவு மாட்டார்; சொல்லக் கருதிய விடயஞ் சொல்லியு மிருப்பார். அற்றேல் பர்னதற்குக் தக நாடி நடக்கவுங்கிற்பேன். இனிமேற் சூழ்ச்சித் திறத்தினிற் பொன்னேயும் வென்ற இப்புகளில் பெரியோன் என்ன கருதி யென்ன செய்வானே ? யான் செயும் ஒவ்வொரு தொழிலையும் அயிர்ப்பான், ஆய்வான். அம்ம! என்செய வல்லேன்! ஆயினும் இவனயிாாவணம் அனைத்தையு மாற்றுவல்-அரசற் கண் மிய தம் மவ கைானுயினன்; துரிய மனிதன் சுற்றமாயினன் ; நெருங்கிய முறைமையான் சேத் தன்மையான்; விலகிய வுரிமையான் மேதகவுடையோன். நன்று என்று! இதுவுங் காலக்கொடுமையேயன்ருே?-ஒ! தலைக்குமேல் வெள் ளம்! எப்புறமும் எரி! என்ன தேனு மெதற்கு மஞ்சிலேன். ஆண்மை யற் றிலேன்; பெண்மை யுற்றிலேன். மேலே வெண்மை வேடம் புனேகுவல். அடியி னில் மறைவா யதிர்வெடி வைத்தே யனேத்தையும் புகைப்பல். குடிக்க வியலா தேற் கொட்டிக் குப்புறக் கவிழ்ப்பல். ஊக்கங் குன்றிலேன்; ஆக்கங் கன்றி லேன். எவ்விதத்தானு மென்னெதிரியை யொழிப்பேன். மாயவ மயங்கேல்! மாயவ மயங்கேல்!” என்று இவ்வாறு மாயவன் கம்பீரசன்னி நோயுற்று வாய்க்குள்ளே பிதற்றிக்கொண்டு மந்திரம் வல்லுநர் மாளிகையினின்று நீங்கிப் போயினன்.

முதல் அத்தியாயம் முற்றிற்று

--

இரண்டாம் அத்தியாயம்

கரவு செயல்கள் - இதுகாறும் பேசி விளையாடிக் கொண்டிருந்த மதிவாணனே வந்த விளைப்பு நீங்க நீராடிய பின்னர், வாய்மையாளர் தம்மொடுங்கூடி விருந்துண்டி கொண்டதன் மேல், மாளிகை மீமிசை செவ்வியதோ ரறையின் கண்ணே, தென்றலங் குழவி மெல்லெனத் தவழ, மன்றலம்பாணி வாய்மையாளர்தம் மக்கள்பாட, இல்லுறை பறவைகளாய கிள்ளேயும் பூவையும் மழலைமிழற்ற,

அயர்ந்து நித்திரை போயினன்.

இதுகிற்க, வாய்மையாளரோ உண்டி முடித்தபின்னர், வழுதியர்பெரு மான் கோயில் புக்கு மதிவாணன். விடுத்த கிறுபங்களு ளேதேனுங் தஞ்சை வாணனரிட மிருந்து போந்துளதோவென் றறிந்து அதற்குத்தக்கதொழில் புரி

யுமாறே மன்னவன் வரவை யெதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். மன்னனும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதிவாணன்.pdf/14&oldid=655662" இலிருந்து மீள்விக்கப்பட்டது