பக்கம்:மதிவாணன்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25S வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

அவ்வமயத்தில் இவுளிமேற்கொண்டா னுேசேர்தல் எதிரே போகரக் கண்ட மாயவன் கரவுநெறி யொன்ற பற்றிக் கடுகக் கலைப்பட்டனன். எதிரே போக்க வீரனும் ஏதோ சிந்தித்துத் தோட்சுமையாளரை யேறட்டுப் பார்த் துப் பிணங்கொல்' என் றயிர்த்தனன். அதுபோழ்தின் இன்பவல்லியு மெழுங் தனள், உறவினர்க் காண்பான் முதனுட் பூவணம்போத்து வழிநாட்காலைப் புரவியிவர்ந்து உலவுறும் மதிவாணனும் அது கண்டு உடனே காலத்தாழ்க் கலன் அத்தீயர் பற்சென்று மேற் சேறலிர், நின்மின்" என்றனன்.

என்றது. செவிப்பட்ட மாயவன் தன் குதிரையைத் தூண்டி விரைந்து போந்து தனது வாளினே யுறைகழித்துக் கைப்பிடித்துக்கொண்டு இவர்க ளைத் தகைத்து கிறுத்துவோன் நீ கொலோ ?” என்று சொல்லி மதிவாணன் மீது பாய்ந்தனன். அங்ஙனம் பாய்ந்தவளவில் அதனே யெதிர்பாராத மதி வாணன் சிறிது பின்னிடைந்து தனது வாள் கைக்கொண்டு முனைந்து நின்ற னன். பரியிவர்ந்த வீரர்க ளிருவர்க்கும் வாட்போர் நிகழத் தொடங்கிற்று.

மாயவனே நன்கு முதிர்ந்து தடித்துப் பருத்துக் கொழுத்த யாக்கை யன்; நமதண்ணல் மதிவாணனே திட்பஞ்சான்ற செறிந்து சிறுத்த வுடலி னன். இவ்விருவரும் வாட்டோரிற் றலையிடலும் சுவற்காவாளர்கள் கால் வரும் வழிகாட்டி யொருவனுமாகிய அவ்வைவரும் போரின் முடிவு காண்டல் வேட்டு மேற் செல்லாது கின்றுவிட்டனர். கட்டிலுங் கீழே யிறக்கி வைக்கப் பட்டது; அதன் கண்ணே வீற்றிருந்த கத்தேவி இன்ப வல்லியும் எழுத்து அதி னின்றும் இழிந்து வாட்போர் கண்டு கின்றனள்.

மாயவனுடன் போந்த அவ்வைவரது அதுதாபம் அண்ணல் மதிவா ன்ைபாற் சென்றதாயினுக் சுத்தங்கருத்தில் மாயவனே வேதல் வேண்டினர். இன்டவல்லியோ வாட்போர் செய்குருளொருவன் தனது இன்பத்தலைவன் மதிவாணன் என்றுணர்ந்து சிந்தை கலங்கி மதிமாழ்கி யுழன்றனள். -

இருவர்வாட்களும் ஞாயிற்றி னிளங்கதிரிற் சுழற்றப்படுத் தோறும் மின்னி யொளிவீசின. இருவர் புரவிகளும் பின்னும் முன்னும் போவதும் வருவதுமாயிருந்தன; ஒருவரை யொருவர் தாக்கினர்; இருவருங் குறிதவருது வாளையோச்சி யெறிந்தனர்; இருவர் வாளெறியும் அவ்வவர் பகைவர் பரிசை களிற் பட்டன வேயன்றிப் பகைஞர் மேனியிற் பட்டில. இன்னனம் நெடு நோம் வாட்போர் கடந்தது. இடையில் மாயவன் புரவி காவதத் துரத்திற்கு மேல் நடந்த இளைப்பினுற் சிறிது தளர்ந்தது. அதுகண்ட மாயவன் தனது பரியை விட்டிழித்து மதிவாணன்மீது மீட்டும் பாய்ந்தனன். இதற்குள் மதி வாணனும் தான் புரவிமீதிருந்தே போர்புரிதல் கேரிதன்றெனக் கருதிப் பரியி, னின் நிழிந்து கின்றனன். மீட்டுமொருமுறை இருபெரு வீரரும் வாட்போர் பிடித்தனர். -

இன்பவல்லிக்கோ மதிவாணன் குதிரையினின்றி Nந்துபோர்புரிதல் அறிவுடைத் தன்றென்ப தெண்ணம். என்செய்வாள்? சிறிது போழ்து வாளா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதிவாணன்.pdf/51&oldid=656046" இலிருந்து மீள்விக்கப்பட்டது