பக்கம்:மதுரைக்கோவை.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மதுரைப்பிரபந்தம்

107



வச்சிங்கங்கள் அநுப்பினகவியின் பொருளைச் சொல்ல வந்தவராகிய தஞ்சை ஷட்டாவ தானம் வைாக்கண் வேலாயுதப் புலவரவர்கள் அக்கவிகளுக்குப் பொருட் சொல்லி செந்தமிழ் நாவலாாகிய நமது எடிற்றரவர்கள் இயற்றின மும்மணி மாலையின் கவித்திறத்தை வியந்து மகா வித்துவாம்ஸர்கொடுத்துள்ள சாத்து கவிகளின் தலைப்பி லிருக்கிற பெயர்களைக் கூறி யன்னோர்கள் பெருமையை மாத்திரஞ் சங்கீத நடையில் நெடிது பிரசங்கித்தார். இதினா லங்கிலேயருக்கு வியப்பிராதென்றுணர்ந்தவர்கள் தஞ்சைமா நகரிலிருந்து வந்த சங்கீத மங்கையை யழைத்த மாத்திரத்தில் எல்லோரும் பெண்பாலின் இன்னிசையைக் கேட்க எதிர்நோக்கி யிருந்தவாறே கின்னரி போன்ற குரற்றொளியையும் சங்கீத மார்க்க நுட்பத் திட்பத்தையும் இம்மங்கையி னிடத்திலேயே கற்க வேண்டு மென்று புகழ்ந்து பேசாதவர்களில்லை. இந்துஸ்தான் மாதர்களின் கச்சேரியும் வெகு உச்சாகமாகவே நடந்தது, இதற்குள்ளாக மணியொன்றாகவே துரைமக்களுக்கு நித்திரை பங்கங்கூடா தென்று அவர்கள் சமுகத்தில் வித்வ ரத்தினங்களுக்குப் பரிசளிக்க வேண்டு மென அக்கிராசனாதிபதி யபிப்பிராயப்படவே கற்பனை யலங்காரமாக மும்மணி மாலை யியற்றின வித்துப் பெருமானாகிய செந்தமிழ் நாவலர் ஸ்ரீ பு. த. செய்யப்ப முதலியா ரவர்களை வரவழைத்தார்கள். அவ்வித்வ ரத்தினம் வந்து நின்ற மாத்திரத்தி லெடுத்துச் சொன்ன அவையடக்கத் தின் மேற்கோள்களையும் அவர் வசன பாகத்தையும் "வாக்கு நயத்தாலறிக கற்றவ ரை" யென்பதுபோலறிந்து கொண்ட எனைப்போன்ற B. A. பட்டம்பெற்றவர்களுஞ், மேலான பட்டம் பெற்றவர்களுஞ் சபா சென்று மெச்சும்படி யாயிற்று. இந்த வித்வரத்தினஞ் சபாரஞ்சிதமாகவும் மகா வீர கெம்பீரமாகவுஞ் சொற்சோா்வு படாமல் அண்ட காேளங்க ளதிரும்படிக்குச் சண்டமா ருதம் போல் வருஷித்த பிரசங்கத்தை பின்னும் வியக்கப் புகுந்தால் விரிவாகும், மாதுரியமாகவும், சாதுர்யமாகவுஞ் சபையிற் பேசுத லெவருக்கு மியல்பன்று நமது எடிற்ற ரவா்களுக் கிதில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதுரைக்கோவை.pdf/88&oldid=1356523" இலிருந்து மீள்விக்கப்பட்டது