பக்கம்:மதுரைக்கோவை.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

மதுரை மும்மணிமாலை




யாதொரு அதுபோகக் குறைவுமில்லை இதுநிற்க, அக்கிராசனாதிபதி சபையை நோக்கி யிப்பொழுது நடக்கப்போகின்ற வித்வர் பரிசைக் கண்டு களிகூரும்படிக்குச் சபையைக் கேட்டுக் கொண்டார். அங்கிலேய பிரபுக்களும், ஏனைய கெம்பீரர்களும் அப்படியே யாகந்தித்து விடுதிக்கேக விரைந்தவர்கள் விரும்பி நின்றனர்கள். ஸ்ரீ P. M. மதுரைப் பிள்ளையவர்கள் மும்மணிமாலை இயற்றின வித்வரத்தினத்துக்கு முதன்முதல் ஆர்ஷாப்பில் சித்திர வெழுத்தில் தம்முடைய பெயரும், செந்தமிழ் நாவலர் பு. த. செய்யப்ப முதலியார் பெயருஞ் செதுக்கப்பட்டிருந்த இரண்டு பொற்காப்பை அக்கிரா சனாதிபதி ஸ்ரீ இராமகிருஷ்ணம் பிள்ளையவர்கள் காத்தளித்தார். அவர் வித்வரத்தினத்துக் கிட்டார். அதற்குமேல் விலையுயர்ந்த சாலுவையை மேற்போர்வையிட்டார். இரண்டாவது மதுரகவி ஸ்ரீ தேவராஜம் பிள்ளைக்கு விலையேறப்பெற்ற சருகையுருமாறும், ரத்தினமிழைத்த மோதிரமும், பொற்கிடியாமும் கொடுத்தார். மூன்றாவது தஞ்சை ஷட்டாவதானம் வைரக்கண் வேலாயுதப்புலவருக்குச் சருகைத் தலைக்குட்டையும், சீல்மோதிமும், சால்வையும், சொர்ணபுட்பமுங் கொடுத்தார். இகைக்கண்டவர்களுள் ஒருவராகிலுங் கைக்கொட்டி மகிழாதிருக்கவில்லை, அதற்குமேல் இங்கிலீஷ் வாத்தியமும், சித்திாப்பதுமைகள்கூத்து நடந்தன. வெகுபேர் தஞ்சை நகர் கிஞ்சுகத்தை மீளவுமழைக்க லாகாதாவென்ற மாத்திரத்தி லழைக்கவே காலமறிந்து லாவணி, காம்போதிபதங்களைப்பாட வே மகா சுகமாயிருந்தது. இக்துஸ்தான் நங்கைய ரிருவரதற்கு மேலொரு கச்சேரி செய்தார்கள். மும்மணிமாலையின் சிறப்புப் பாயிரத்தின் ஆக்கியோனாகிய தஞ்சை ஷட்டாவதானப் புலவர் அச்சிறப்புப் பாயிரத்தை வியாக்கியானஞ் செய்யாமல் விளங்க வாசித்துவிட்டார். அதற்குமேல் மும்மணிமாலையின் ஆசிரியராகிய செந்தமிழ்நாவலர் செய்யப்ப முதலியாயரை யழைத்து நிறுத்தின மாத்திரத்தில் நித்திரை செய்துக்கொண்டிருந்தவர்க ளெல்லாந் திடுக்கிட்டெழுந்து குந்கிக் கேட்கப் புகுந்தார்கள் நாவலர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதுரைக்கோவை.pdf/89&oldid=1356676" இலிருந்து மீள்விக்கப்பட்டது