பக்கம்:மதுரைக்கோவை.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மதுரைப்பிரபந்தம்

109



கடவுள் வணக்க முதல் மூன்று செய்யுளுக்கு வியாக்கியானஞ் செய்வதற்குள்ளாக உதயகிரிக் கொள்ளியோன் வருவதற்கோலை யநுப்பினது போலிருந்தது. மும்மணி மாலையில் ஒவ்வொரு கவியும் ஆழ்ந்தபொருளோ டமைந்திருப்பதினா லொவ்வொரு கவியை யொவ்வொரு இராத்திரி முழுதிலு மேற்கோளுடன் சொல்ல வல்லவராகிய நாவலரை விரைந்து முடிக்க யாங்கள் தூண்டிவிட்டமையினால் மூன்று செய்யுளுக்கே பொருட்சொன்னாா், இத்தகைய பிரசங்கங்களுக்குப் பிரத்தியேகமான காலமாக விருக்கவேண்டும், பல சிறப்பிவிதுவு மொன்றாக விருப்பதிலென் ன திருப்திகரமுண்டு, எம்போலியருக்கு மும்மணி மாலையின் முப்பது செய்யுள்களையும் அதையாக்கியோன் தமது பத்திரிகை மார்க்கத்தில் வாரத்துக்கொரு செய்யுளை விளக்கிக்காட்டுவாரெ ன்கின்ற நம்பிக்கை பிறந்திருக்கின்றது, இல்லாவிடிற் பல கவிகளுக்கு பொருள் விளங்காமல் எமக்கு மயக்கமுண்டாகலாமே, இதுநிற்க அதற்குமேல் தஞ்சை ஷட்டாவதானி சண்மணிகட்டளைக் கலிப்பாக்களைப்பாடி வாழ்த்தினார். நாலருடைய மாணாக்கரும் கத்தீட்ரல் கலாசாலை யுபாத்தியாயருமாகிய ஸ்ரீ பு. அ. சவேரிமுத்தாப்பிள்ளே இந்திரசபா மெட்டிற் பாடியுள்ள கண்ணிகளை வெகு நயமாகப் பாடினர், அதற்குமேல் ஸ்ரீ பேறை தசாவதானம் ஜெகநாதம் பிள்ளையவர்கள் கவியும், நாகூர் ஸ்ரீ குலாமகா திறுநாவலர் இயற்றின மதுரைக்கோவையின் ஒருபாகமும் இாக்தினவியாபாரம், நாற்கவி நாவலர் இ. வு. கிநுரு முகம்மதுமரைக்காயர் இயற்றின கவிகளும், ம-ள-ள-ஸ்ரீ வித்வான் அல்லி மரைக்காயர் இயற்றின யமகலந்தாதியும் வேறு சிலகவிகளும் தஞ்சை ஷட்டாவதானி யவர்களா லரங்கேற்ற லாகின ஸ்ரீ P. M. மதுரைப்பிள்ளை யவர்களுடைய உதாரத்துவத்தை கண்டுகளிக்க வந்திருந்த ஸ்ரீ குலாம்காதிறு நாவலரும், நாகூர், சுல்தான் மகதூம்மாலுமியவர்களும், நாகூர் கிருச்சந்நதி குரு அம்ஜா சாகிப்யவர்க ளும், நாகூர் கருகா நாட்டாண்மை வா. செய்யது முசம்மது கலிபாசாயபு அவர்களும், இன்னும்பலரும் பேராநந்தங் கொள்ளத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதுரைக்கோவை.pdf/90&oldid=1356796" இலிருந்து மீள்விக்கப்பட்டது