பக்கம்:மதுரைக்கோவை.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

மதுரை மும்மணிமாலை


 தக்க மரியாதைகள் சகல உபசாரத்துடன் நடந்தன. வித்துைக்குழா ங்களிவ்வாறு பிரபுக்கள் மீது பாடிப் பரிசுபெற்ற காலம் நெடுநா ளாயிற்றென்று கருதியிருந்தவர்கள் கண்ணாற்கண்டு களிக்க நமது நகருக்நற்பாடங் கற்பித்த ஸ்ரீ P. M. மதுரைப்பிள்ளை நீடுழி வாழ்கவென்றிதனை முடிக்கிறேன்.

எமதுநேசர் ஸ்ரீ P. M. மதுரைப்பிள்ளை வருகை

'------------'

இரங்கோனில் கப்பல் துவிபாஷியாகவும், ஐரோப்பா வர்த்தகரின் ஏஜெண்டாகவும், விளங்கும் ஸ்ரீ P. M. மதுரைப்பிள்ளை யவர்கள் சென்னைக்கு வந்திருக்கிறார். இவர் நற்கீா்த்தியை நன்குணா்ந்த தஞ்சை சமஸ்தானம் நீ துரைசாமி ஐயரவர்கள் வித்துவப்புருடர்களைக் கொண்டொரு பாமாலை யியற்று விக்கிறார், அம்மாலையைப் பற்றி வருகிற வாரத்திய பத்திரிகை தெரிவிக்கும் இன்று காலை தஞ்சை சமஸ்தான சுவிகாரப் பிள்ளையுடையவும் ம-ள-ள-ஸ்ரீ சக்காராம் சாய்பு அவர்களின் பேட்டிக்கும் பிரயாணமாகிவிட்டார். அடுத்த வாரஞ் ஞாயிற்று கிழமை திரும்புவார் போலும் இவர் பெருமையை யினிவரும் நமது பத்திரிகை தொடர்ச்சியாக வெளியிட்டு வரும். (வெற்றிக்கொடியோன்)

'------------'

நாகூர்.

(ஒருநேசரெழுதியது. )

'------------'

இரங்கோன் கப்பல் துவிபாஷியும், வியாபாரியுமாகிய ம-ள-ள-ஸ்ரீ P.M. மதுரைப்பிள்ளை யிங்கு வந்தவிடத்தில் கனவான்களாகிய மகமதிய பிரபுக்கள் பலர் இந்துக்கள் பலர் அவருக்கு நல்ல மரியாதை செய்தார்கள். தஞ்சையில் ராஜகுலப் பெருமான்கள் வாப்பெற்று பெருங்கண்ணியஞ் செய் தநுப்பின செய்தியை முற்றிலு மெழுதினா லுமது பத்திரிகையி லிடம் பாேதாதெ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதுரைக்கோவை.pdf/91&oldid=1356826" இலிருந்து மீள்விக்கப்பட்டது