பக்கம்:மதுரைக்கோவை 1888.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக்கோவை. நாடனும், துரையு மென்புழி யும்மைகள் விகாரவகையாற் றொக் சிலம்பிற்றாக்குங் கவின்முலையென்புழி, சிலம்பிலேதாக்கு முலைக ளென விசேடிப்பாரு முளர். முலையானடையென்புழி, யானென்பத னை நானெனக்கொண்டு, முலையென்புழி மூன்றாவது விரித்துப் பொருள் கூறினாலோ வெனின்; - நெஞ்சேயென்பது முன்னிலைத் தன்மையாகலி ன், அது பொருந்தாதென்க. பனிமெழி அன்மொழித்தொகை. அன் று அசை நிலை. அன்றென்புழி வினா வோகாரம் விரித்து, நோக்கமன் றோவெனக்கூறினு மமையும். நெஞ்சே யென்னு முன்னிலை யெச்சம்-ஏ காரம் ஈற்றிசை, - முலைகளானடைந் தமம்மரையகற்றப் பனிமொழியினது நோக்கம் மிழ்தினு நூங்கிதெனவே, அவட் பார்வையான் வேட்கையுண்டென்று கு றிப்பறிந்தமை காண்க. ஆயின், தலைமகள் வேட்கையாற் பார்த்தனளாதல் வேண்டும்; ஆகவே, புணர்ச்சிக்குடன்பட்டாளென்று முடியுமன்றே,பு ணர்ச்சிக்குடன்பட்டாளென்பது, கைக்கிளையினிலக்கணமன்றன்றோ, ஆ கலின், குறிப்பறிந்தாளென்பது பொருந்துமோவெனின்; - நன்றுகடாயி னாய். அவள் வேட்கையாற் பார்த்தாளல்லள், மற்றென்னையெனின்; அவளகத்து இனி நிகழும் வேட்கையைப் பார்வையா னறிந்தானென்க. அஃதெங்ஙனமெனின் ; பசித்து வந்தானொருவன் ஒரு தக்கானைக்கண் ணுற்றக்கால், அத்தக்கான் பசித்துவந்தானை நோக்குழியந் நோக்க மவன் பசிதீர்க்குமென்றோ தீர்க்காதென்றோ பொதுவாய் நிற்கும். அதுபோல அவட்பார்வையும் பொதுவாய் நின்றது. பசித்துவந்தவன் பசிவயத்தனாக லின், அத் தக்கான் பார்வையான் சோறிடுவானென் றெண்ணுவானன்றி, இடானென்றெண்ணான். அதுபோலத் தலைமகன் அவாவயத்தனாகலின், தலைமகட் பார்வையான் வேட்கையுண்டென் றறிந்தானெனக் கொள்க. ஆயின், வேட்கைகுறிப்பறிவுமுடன்படலு மற்றியாண்டையோவெனின்; "முறுவற்குறிப்புணர்தல் மறுத்தெதிர்கோட" லென்பனவற்றானெ ன்றுணர்க. 27 86 இவற்றிற் குரிய விலக்கண மனைத்தையும் விரிக்கப்புகின் வரம்பி ன்றிப் பெருகுமாகலின், ஒருபடியேசுரிக்கி முடித்தாம். ஆகலின், வேண் டியவற்றிற்குத் தொல்காப்பியமுதலிய நூல்களிற் கண்டுகொள்க. இனி வருஞ்செய்யுட்களுக்கும் அறிவனவற்றை யுய்த்துணர்க. கைக்கிளை முற்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதுரைக்கோவை_1888.pdf/10&oldid=1734508" இலிருந்து மீள்விக்கப்பட்டது