பக்கம்:மதுரைக்கோவை 1888.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 மதுரைக்கோவை. கணிதிகழ்ஞாங்கரங்காந்தளின் கீழ்மயில்கண்பரப்பும் பணிதிகழ் சூழற்பளிக்கறையாங்கள்பயிலிடமே பாங்கி குறியிடத்திறைவியைக்கொண்டு சேறல். விரைகெழுவேங்கையுங்கொய் துங்கலாபம்விரித்துநின்று நிரைகெழுமஞ்ஞைகளாடலுங்காண்டு நெடுமதிள் விண் ணுரைகெழு சென்னைவளநாடுடையுசிதன்மதுரை வரைகெழுமாநீரருவியுமாடுதும்வாமயிலே. பாங்கி தலைமகளைக் குறியிடத்துய்த்து நீங்கல். பொருங்கண்ணணங்கனையாய் வேண்மதுரைப்பொருப்பினின் கருங்கண்ணெதிர்ந்துகடும்பகைகாட்டிய காவிமுற்று மொருங்கண்மிக்கொய்திங்குறுவலிம்மாதவியொண்ணிழற்கீ ழருங்கண்ணலர்த்திமயிலாடனோக்கியமர்ந்தருளே. இறைவி யிறையோனிடத் தெதிர்ப்படுதல். விண்டொடுமால்வரைத்திண்டோண்மதுரை வியன்சிலம்பிற் றண்டொடிருமுகையோடோரல்ரொடுதாவுமிரு வண்டொடுதேறல்வழிதொண்டையோடிருமல்லிகைப்பூஞ் செண்டொடுகிற்கக்கண்டேனொருவாமத்திருவிளக்கே. புணர்ச்சியின் மகிழ்தல். விண்ணுந் தருவுமனையான் மதுரைவிண்டோய்சிலம்பிற் பண்ணுந்தகையவிச்செய்கையென்னோவிந்தப்பாவைநல்லாள் வண்ணந்தருமொர் குமுதம்பொருவுசெவ்வாயமுத முண்ணுந்தொருமிக்கினிக்கின்றதாலென்னுடன் முழுதே. புகழ்தல். தீரன்மொழியிற்றிருமான்மதுரைச் செழுஞ்சிலம்பில் வாரன்புலவுமயில்ளையாய்நின்வன் முலையி னேரன்பொடுபெற்றிணையாயிருப்பதையெண்ணியன்றோ மாரன்மகுடந்தனை வணங்காச்சென்னிவைத்ததுவே. தலைமகளைத் தலைமகன் விடுத்தல். விண்ணிவர்கொண்மூவரவோர்ந்துநெஞ்சம்விழைவினொடு கண்ணிவர் தோகைகளித்தாங்குநின்றன் வரவுகண்டு தண்ணிவர்மாலைத் தடந்தோண்மதுரைத்தனிச்சிலம்பிற் பண்ணிவர்தீஞ்சொனல்லாய்களிப்பார்செல்கபாங்கியுரே. கஙக கஙஉ கஙங கஙச ககூரு கஙக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதுரைக்கோவை_1888.pdf/31&oldid=1734529" இலிருந்து மீள்விக்கப்பட்டது