பக்கம்:மதுரைக்கோவை 1888.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 மதுரைக்கோவை. மகளைக் கண்டானென்க. இதனைவிரிப்பிற் பெருகுமாகலின், பெருநூற்க ளிற்காணக. இதற்குச் செய்யுள் பூமேவு கொன்றைவடிவார்கமலம்பொலிகுவளை மாமேவு தண்ணங்குமிகை செவ்வாம்பல்வயங்கமுகை தாமேவுகொம்பொன்று சீமான் மதுரைத் தடங்கிரிசூழ் காமேவுகற்பகம் பொற்பகமாகிடக்காண்கின்றதே. (இதனுரை.) முகை தாம் மேவு கொம்பு ஒன்று- இருதாமரைமு கைகள் பொருந்தியவொரு கொம்பானது, பூ மேவு கொன்றை -பூக்கள் பொருந்துமோர் கொன்றைக்காயும், வடிவு ஆர் கமலம் - அழகுநிறையுமோர் தாமரைப்பூவில், பொலி- பொலிந்துதோற்றும், குவளை - இருகுவளைப்பூக் களும், மா மேவு தண் அம் குமிகை - பெருமைபொருந்திய குளிர்ந்த வ ழகிய வோரெட்பூவும், செவ்வாம்பல் - ஓர்செவ்வல்லிப்பூவும், வயங்க - தன் னிற்பிரகாசிக்கவும், சீமான் மதுரை - ஸ்ரீ மானாகிய மதுரைப் பிள்ளையின் து, தடம் கிரி சூழ் - அகன்ற மலைக்கண்சூழ்ந்த, கா காவின்கண் - மேவு கற்பகம் - அங்குப்பொருந்திய கற்பகமரமானது, பொற்பு அகம் ஆகிட அழகிய பக்கமாகவும், காண்கின்றது - (நெஞ்சே! என்கண்களிற்) காண் கின்றது என்றவாறு. ய கொன்றை, கமலம், குவளை, குமிகை, செவ்வாம்பலென்பன வாகு பெயர்கள். கமலமொழிந்த நான்குமும்மைகடொக்குநின்றன. கமலம் ஏ ழாவது தொக்கவேற்றுமைத்தொகை. வயங்க, ஆகிட வென்புழியுமும் மைகடொக்கன. ஆகவென்பது, ஆகிடவெனப் பகுதிப்பொருள் விகுதி யேற்றுநின்றது. பொலியென்பதனைக் குவளை, குமிகை, ஆம்பலென்னு மூன்றற்குங் கூட்டி, கமலத்திற் பொலிந்துதோற்றுங் குவளையும் குமிகையு மாம்பலுமெனக் கொள்ளக்கிடத்தலின், முகையுமத்தாமரையினவென்பது பெற்றாம். இரண்டென்பது தோன்றமுகைதாமென்றார்.என்னை " மென்கிளவி பன்மைக்குரித்தே என்றாராகலின். ஏகாரமீற்றசை. தலை மகன், கற்பகம்பொற்பகமாகிடக் காண்கின்றதே யென்றானாகலின், அவ னவ்வுருவைக் கற்பகமரத்தின்கீழ்க் கண்டானென்றுணர்க. இவ்வுலகின் கண்ணுங் கற்பகமரங் கூறற்பாற்றோவெனின்; இனி யைய நிகழ்வுழிவா னரமகளோவெனவு மையம்பிறத்தல் வேண்டிப் புனைந்துரையாற் கூறப்ப ட்டதென்க. "கற்பகத்தினயலே பசும்பொற்கொடி நின்றதால்" என் றார் பொய்யாமொழிப்புலவரும். " - தா இனி, கோவைக்கண் அகப்பாட்டுக்களு ளொருபாட்டுக் கேட்டக் கால், என்னை "திணையேகைகோள் கூற்றே கேட்போ ரிடனே காலம் பயனேமுன்ன மெய்ப்பாடெச்சம் பொருள்வகைதுறையென் - றப்பா லாறிரண் டகப்பாட்டுறுப்பே." என்றாராகலின், இப்பன்னிரணடகப்பாட் டுறுப்பும் வரல்வேண்டுமென்ப திலக்கணமாகலின், குறிஞ்சி, பாலை, முல் லை,மருதம்,நெய்தலென்னுந் திணையைந்தனுள்ளு மிப்பாட்டின் மனையா வது குறிஞ்சி, முதலுங்கருவுமுரியுமென்னு மூவகைப்பொருளானு முண

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதுரைக்கோவை_1888.pdf/5&oldid=1734503" இலிருந்து மீள்விக்கப்பட்டது