6 மதுரைக்கோவை. இனிவரும் பாட்டுக்கட்டு மேற்கூறிப் போந்தனவற்றைப் பொருந் துமாறுய்த்துணர்ந்துகொள்க. இரண்டாவது:- ஐயம். என்பது, என்னை "மடமானோக்கி வடிவங்கண்ட - விடமுஞ்சிறந் ழி யெய்துவதையம்' என்றாராகலின், தலைமகன்றன்னாற் காணப்பட்ட இத்துணைமேதகவுடையாள் நீரரமகள்கொல்லோ, சூரரமகள்கொல்லோ, வரையரமகள் கொல்லோ வானரமகள்கொல்லோ அன்றி, மக்களுள்ளாள் கொல்லோவென ஐயுற்றுக்கூறாநிற்றல். இதற்குச் செய்யுள் :- சிரோவகன்றுவிளங்கிய வாழிடன்றண்ணுறைதெண் ணீரோவனமோவரையோபிறவெனினீள்விசும்போ காரோதருவோவெனுங்கைமதுரைக்கவின்கொள் சென்னை யூரோதெரியரிதானெஞ்சுகாண்டியிவ் வொண்டொடிக்கே. . (இ-ரை.) நெஞ்சு காண்டி - நெஞ்சமே நீ காண்பாயாக, இவ் ஒண் தொடிக்கு - இவ்வொள்ளிய தொடிகளையுடையாட்கு, சீர் ஒவகன்று விளங்கிய வாழ் இடன் - செல்வமான தொழிவுநீங்கி விளங்கவாழுமிடமா னது, தண் உரை தெள் நீரோ - குளிர்ச்சிபொருந்தும் தெள்ளிய நீர்கொல் லோ, வனமோ - வனங்கொல்லோ, வுரையோ - மலைகொல்லோ, பிறஎ னின் - இவையல்ல பிறவென்றால், நீள் விசும்போ - நிண்ட வானங்கொல் லோ, காரோ தருவோ எனும் கை மதுரை - கரிய மேகங்கொல்லோ கற் பக மரங்கொல்லோவென்று சொல்லுங் கைகளையுடைய மதுரைப்பிள்ளையி னது, கவின் கொள் சென்னையூரோ-அழகுகொள்ளுஞ் சென்னபட்ட ணங்கொல்லோ, தெரியரிது - தெரியவரிதாயிருக்கின்றது. எ-று. சீரோவகன்றுவிளங்கிய வாழிடனென்பதற்கு, சீரானது விரிந்துவி ளங்க வாழுமிடமெனினுமமையும். விளங்கிய வென்பதனைச் செய்யிய வென்னும் வாய்பாட்டுப் பெயரெச்சமாக்கொண்டு, இடமென்னும் பெய ரொடு முடிப்பாருமுளர். மதுரையென்பது ஆறாம் வேற்றுமைத்தொகை. தெரியவரிதென்பது, தொகுக்கும் வழித்தொக்கது. ஆல்அசை. நெஞ்சு அண்மைவிளி. ஒண்டொடி அன்மொழித்தொகை. ஏகாரம் ஈற்றசை. து காரோதருவோவென்னு மோகாரங்களொழிந்த வோகாரங்களைக் தும் ஐயப்பொருளினின்றன. தெரிநிலைப்பொருளில் வந்தமையான் றெ ரிநிலையோகாரங்களெனக் கொள்ளிற்படு மிழுக்கென்னையெனின்;- இப் பாட்டின்கிளவி யையமாகலானும், அலங்காரமு மையமேயாகலானும், யப்பொருளிற்கொள்ளாக்கா லையநிகழாதாகலானும், இவ்வோகாரங்க ளைய மேயென்க. எனின்; - என்னை "பிரிநிலைவினாவே யெதிர்மறையொழிய
பக்கம்:மதுரைக்கோவை 1888.pdf/7
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை