பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 மதுரைக் குமானுர் யிருந்தபடியால், அவற்றை வெற்றிலே வணிகரான கிராஞ்சிமலை கிளியகின்ருன் சகஸ்ரனும், வேதகோன் புரத்து அருளாள சகஸ்தனும் என்ற இருவரும் இடக்கடவ. ரென்றும், இதற்கு ஊதியமாக இவர்கள் இங்காட்டில் வங் திறங்கும் வெற்றிலக்குத் தரகுபெறக் கடவரென்றும் குடுமியாமலேக் கல்வெட்டு (125) கூறுவதுகொண்டே அறியலாம். ஒருகால் இத்தகைய தரகு காரணமாகப் பனையூர், குளமங்கலம் என்ற இரண்டு ஊரார்க்கிடையே போரும் உண்டாயிற்று. பொருளழிவும் உயிரழிவும் மிக உண்டாயின. பலர் ஊர்களினின்றும் வெளியேறி னர். முடிவில் ஊரார் இருவரும், நகரத்தாரும் கண்மா ளரும் நடுவிருந்து சந்துசெய்ய ஒற்றுமையெய்தி உடன் படிக்கையும் செய்துகொண்டனரெனப் பனையூர்க் கல் வெட்டு (670) கூறுகிறது. போருண்டாயின் அதற்குத் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளுவது குறித்து, ஊரவ்ர் அரசர் காவலையே பெரி தும் சார்ந்திராது தம்மைத்தாம் பாதுகாத்தற்கு வேண்டும் செயல்வகைகளையும் மேற்கொண்டிருந்தனர். அத்னைப் ப்ாடிகாவல் என்றும், அது குறித்துச் செய்யும் சாசனங் களைப் பாடிகாவற் பிரமாணமென்றும் வழங்கினர். ஆத லூர் ஊரவர், பொன்னமராவதிகாட்டு இராசசிங்கமங்கலத் தார்க்குச் செய்து கொடுத்திருக்கும் பாடிகாவற் பிரமா Sorth (P. S. Ins. 669) 'துலுக்கர் கலகமாய் எங்கும் கட் டாளும் பிடியாமல் பரிகரித்து, வேறு ஒருவர் இவ்விடங் களில் சிலைாரும் கொள்ளாமல் பரிசுரித்து, செவ்வலூர் அடித்துக்கொண்டுபோன கன்றுகாலியும் விடுவித்துத் தந்து, நாங்கள் இங்கு இருக்குமளவும் சோறும் பாக்கும் ஆராய்ந்து எங்களைப் பரிகரித்துக்கொண்டு போந்தபடி யாலே மேலும் எங்களை இப்படிப் பரிகரித்துக்கொண்டு போகவேண்டுமென்கிற இத்தைப்பற்றிப் பாடிகாவற் பிர மாணம் பண்ணிக்கொடுத்தோம். இராசசிங்கமங்கலத்து (இராங்கியம்) ஊரவர்க்கு ஆதனூர் ஊராக இசைந்த ஊாவரோம்' என்று கூறுவது இதற்குப் போதிய சான் ருகும். -