பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோளுடு - 63 எண்ணிப் பெற்றது கொண்டு பேரின் புற்று வாழ்வதைக் குமரனர் கண்டார். தாமும் மதுரைக்குச்சென்று சேர்க் தார். பின்னர் அவர் மதுரையைத் தமக்கு இருக்கை யாகக்கொண்டு தமிழகம் முழுதும் சென்று வந்தனர். அவர்க்கு மதுரைக் குமரனர் என்பதே பெயராயிற்று. மதுரையில் வாழ்வமைத்துக்கொண்ட குமானுர் அக் காலத்தே வாழ்ந்த தம்மையொத்த சான்ருேர் ப்லர்ைக் கண்டு அளவளாவிச் சிறந்த பல பண்புகளை அறிந்து கொண்டார். தமிழ்நாட்டின் தலைநகரங்களுள் ஒன்ருகிய மதுரையில் இருந்து ஆட்சிபுரிந்த வேந்தரும் தமிழர் அரசி கயல் மொழியும் தமிழ், அதனே நடாத்தி யுய்க்கும் அரசவை யத்தாரும் சான்ருேரும் அனைவரும் தமிழர்; வாணிகம், தொழில், வழக்கியல் யாவும் தமிழாகவே இருந்தன. எங்கும் எவரிடத்தும் தமிழ்மொழியின் கனிமணம் சிறந்து கமழ்ந்தது. தமிழ்ப் புலமை மிக்க சான்ருேர்க்குத் தனித்த வகையில் சில உரிமைகள் வழிவழியாக இருந்துவந்தன். அச்சம், நல்குரவு, காத்தடை, சமயக்கட்டு என்ற நால் வகைத் தடைகளும் தமிழ் மக்கள்பால் பொதுவாக இல்லை; சிறப்பாக அத்தடையின்மையைக்கொண்டு, புலமைவளம், படைத்த சான்ருேர் நாட்டிற்கு நல்ல தொண்டாற்றி வந்தனர். காட்டவர்க்குப் பெரும்பயன் விளக்கத்த்க்க வேந்தரும் செல்வரும் அப் பயனை விளைவிக்கும் துறை களில் இறங்கி வேண்டுவன செய்யுமாறு இச் சான்ருேர் அவர்களே யூக்குவது தமது கடமையாகக் கொண்டிருங் தனர். வேந்தரும் செல்வரும் செய்யும் செயல்வக்ைக ளால் வெளிப்படும் கலங்களே இச் சான்ருேர் செல்லுமிடங் தோறும் பலரும் அறியத் தம் உரையாலும் பாட்டாலும் எடுத்தோதிப் புகழ் பரப்பினர். அவர் செய்யும் செயல்க ளால் தீமை விளையின் அதனையும் எடுத்தோதிக் களைக் தனர். இதனுல் இச்சான்ருேர்பால் பெருமதிப்புக் கொண்டு வேண்டுவன நல்கிச் சிறப்பிப்பது இவ்வேந்தர் முதலாயிஞர்க்குக் கடமையாயிற்று.