பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 மதுரைக் குமரனுள் பொழுது விடிந்தது. காலையில் வயல்கட்குச் செல்ல அற்ற உழவர், இரவிற் சமைத்து நீரிற் கிடப்பித்த வெண் சோற்றை அவ் வாளேக் கறியைத் துணையாகக் கொண்டு தம் வயிறு நிரம்ப் வுண்டனர். விலாப்பக்கம் இரண்டும் புது நெல் வெண்சோற்ருல் புடைத்துத் தோன்றின. ஆண்களும் பெண்களுமாக உழவர் நெல் விளைந்துள்ள வயல்களே யடைந்தனர். இரவிற் சமைத்த சோறும் கறியும் காலையிற் பழமைபட்டு உண் பார்க்குச் சிறிது களிப்பினை யுண்டுபண்ணும். இதனைக், குமரகுரும் நன்கறிந்தனர். காலையில் வெயில் ஏற ஏறப் பழஞ் சோற்றின் களிப்பும் மிகும். அக்காலே அவ்வுழவ ருடைய செயலைக் காண்பதில் குமரனுருக்கு விருப்ப முண்டாயிற்று. உழவர் தொழில் புரியும் வயற்பக்கம் சென்ருர், உழவர்கள் குனிந்த தலை கிமிராது விளைச்சலை அறுப்பது கண்டார். நெற் சூடு கைங்கிறைந்ததும் அரியரியாக வைப்பது முறை. பழஞ் சோறும் பழங் கறியும் உண்டதனுற் பிறந்த களிப்பு அவர்கட்குத் தடுமாற்றம் விளைப்பதைக் குமானுர் கண்டார். வைத்தற் குரிய இடத்தில் வையாது நெற்குட்டரிகளே முறை மாறி வைக்கலாயினர். அதனுற் கம்பலையும் பெரிது உண் டாயிற்று, அறுத்த குட்டை வைக்குங் கால் தடுமாற்றம் உண்டாயிற்ருயினும், அவ்வுழவருடைய கைகள் நெல் லரியும் தொழில் நன்கு பயின்றிருந்தன வாதலால், பிறழ்ந்து தமக்கும் நெற்ருளுக்கும் சிதைவு உண்டு பண்ணுத_தளர்வு சிறிது மின்றித் தம செய்கையைச் செவ்வே செய்தன. அதை துணித்து நோக்கிய குமானுச் * வன்கை வினைஞர் ' என இவர்களைக் குறிப்பது நேரிதே என எண்ணினர். எண்ணியவர் மலங்கு மிளிர் செறுவில் தளம்பு தடிந்திட்ட பழன வாளைப் பரூஉக்கண் துணியல் புதுகெல் வெண்சோற்றுக் கண்ணுறை யாக விலாப்புடை மருங்கு விசிப்ப மாந்தி டுேகதிர்க் கழனிச் சூடு தடுமாறும் வன்கை வினைஞர்"