பக்கம்:மதுரை மாவட்டம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 அறுசமயத்து அறநெறியுந் திருத்துகின்ற மனுநெறியுந்: திறம்பாது தழைத்தோங்க' என்னும் சடாவர்மன் சுந்தர பாண்டியனின் மெய்க்கீர்த்தியால் உணரப்படும். நாயக்க மன்னர்களின் ஆட்சியில் மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலின் முதன்மைக்கு முரண்படாத வகையில் வைணவம் ஏற்றம்பெற்றது. பிற்காலப்பாண்டியர் ஆட்சியிலும் நாயக்கர் ஆட்சியிலும் ஏற்பட்ட வைணவக் கோயில்களை மாவட்டம் முழுவதும் காணுகிறோம். ஆனால் மதுரை, அழகர்கோயில், திண்டுக்கல் ஆகிய நகர்ப் பகுதிகளில் மட்டுமே வைணவக் கோயில் கள் புகழுடன் திகழ்கின்றன. சைவ வைணவக் கோயில்களை இணைக்கும் விழாவாகச் சித்திரைப் பெருவிழா கொண்டாடப் பெறும் சிறப்பும் மதுரைமாவட்டத்திற்கு உரியது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற திருமோகூர்த் திருக்கோயிலும் பாண்டியமன்னர்களின் வைணவப் பற்றுக்குத் தலைசிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இது 1978-இல் புதுப்பிக்கப் பெற்றது வைணவ ஆச்சாரியார்களுள் பெரும்புகழ் பெற்ற மணவாள மாமுனிகள் அவதரித்த கொந்தகை, இராமநாதபுர மாவட்டத்தைச் சேர்ந்த ஊராயினும், மதுரை மாநகரின் புறநகர்ப் பகுதியிலுள்ளது. வைணவு சமயத் துறவிகள் பரமபதம் அடைந்த பின்பு அவர்களுடைய உடல் புதைக்கப்பட்ட இடத்தில் கோயில் எழுப்புவது மரபு. அவர்கள் பள்ளிப்படுத்தப்பட்ட இடத்தில் அவர்களுடைய இஷ்ட தெய்வம் அமைத்து, பக்தர்கள் வழிபடுவர். மதுரைமாவட்டத்தில் இரண்டு பிருந்தாவனங்கள் உள்ளன. துவரிமானில் அகோபில மடத்தின் 40-ஆவது பட்டத்துச் சுவாமி களின் பிருந்தாவனம் இருக்கிறது. ஸ்ரீமத் சடகோப ஸ்ரீ ரங்கநாத சடகோப யதீந்திர மகாதேசிகன் அழகிய சிங்கர் என்று இச் சுவாமிகளைக் குறிப்பர். இந்தச் சுவாமிகளின் இஷ்ட தெய்வமான ஸ்ரீ லெட்சுமி நரசிம்மர், இப் பிருந்தாவனத்தில் வழிபடப் பெறு கிறார்.