பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிழக்கும் மேற்கும் 91 கொடு என்று கூறிய ஆன்மிகவாதிகளை மட்டும் ஏன் உலகம் போற்றுகிறது! இதன் காரணம் யாது? வாழ்க்கை வளம் என்பதற்குத் தரும்பொருள் வேறுபாட்டினால்தான் இது நிகழ்கின்றது. ஆடையும், அணிகலனும், பொன்னும், பொருளும், போகமும், பிறவும் ஒருவனுக்கு வளர்ந்து விட்டால் அதனை வளமான வாழ்க்கை என்று கூற முடியாது என்று உணர்ந்தனர் கீழை நாட்டார். ஒன்றின்மீது ஆசை ஏற்படுகிறதா? அடுத்து அது கிடைக்க வேண்டுமே என்ற கவலை! கிடைத்த பிறகு பயன்பாடு பற்றிய கவலை! இப்படியே கவலை கவலை என்று கவலையை வளர்த்துச் செல்லு கின்றனர். இதுவே துக்கம், துக்க உற்பத்தி, துக்க நிவாரணம், துக்க நிவாரண மார்க்கம் என விரிகிறது என்றான் புத்தன். இதனெதிராக ஆசை தோன்றிய வுடன் அதனைக் களைந்து எதுவும் வேண்டாம் என்று விட்டுவிடு. தொல்லையே இல்லை. மேலும் “விட்டேம் என்பாரை விடாஅள் திருவே” என்று புறநானூறு ஆசிரியர் விளம்புவதுபோல், வேண்டாம் என்று சொல்கிறவர் களிடம் அது வந்து குவியும் இயல் புடையது. "ஒளியை நோக்கி முன்னேறிப் போங்கள், நிழல் தொடர்ந்து வரும். நிழலைப் பிடிக்க எண்ணி நிழலைத் தொடர்ந்து சென்றால் நிழல் ஓடும். நீங்களும் ஒட வேண்டும் என்று இராமகிருஷ்ணர் அழகாகச் சொன்னார். இதனைத்தான் பற்றற்ற நடுவு நிலை என்று கிழக்கே தோன்றிய சமயங்கள் கூறுகின்றன. மக்கள் வாழ்வை இரண்டாகப் பகுத்து, அறிவின் துணை கொண்டு வாழ்கின்ற புற உலக வாழ்க்கை வேறு, உணர்வின் துணைகொண்டு வாழ்கின்ற அகவுலக வாழ்க்கை வேறு என்றும் - புற